• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் ஜெயக்குமார் நல்லவர்,களங்கமில்லாதவர் – தம்பிதுரை எம்.பி

October 26, 2018 தண்டோரா குழு

வட சென்னை படத்தில் வந்திருப்பதை போலவே முரண்பட்ட காட்சிகள் சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது.அமைச்சர் ஜெயக்குமார் நல்லவர், களங்கமில்லாதவர் என மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்ய போவதாக சொல்லி இருப்பது தொடர்பான கேள்விக்கு,யார் எங்கு சென்றாலும் தீர்ப்பு ஒன்றாகவே இருக்கும்.அரசியல் சாசன அடிப்படையில் சபாநாயகர் முடிவெடுத்துள்ளார்.முறைகேடுகள் வரக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும்,எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே இருக்கின்றது.உள்ளாட்ச்சி தேர்தலை நடத்த அதிமுக தயாராகவே இருக்கின்றது.உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது திமுக எனவும்,வழக்கு நீதிதுறையில் இருப்பதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தாமதமாகின்றது என தெரிவித்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும்,தொண்டர்களாக வருந்தி வந்தால் அவர்களை இணைப்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும்.நடிகர் தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் முரண்பட்ட காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.அது போலவே வடசென்னையில் முரண்பாடான செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றது.

சபாநாயகர் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது.தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் சபாநாயகருக்கு இதில் தலையிட உரிமையில்லை.பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ வையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதா இல்லையா என்பதை தலைமை முடியும்.தினகரன் சொன்ன ஸ்லிப்பர் செல்கள் எங்கிருக்கின்றது என்றே தெரியவில்லை அவற்றை தேடிப்பார்க்க வேண்டும்.

முல்லை பெரியார் அணை முன்பாக புதிய அணை அமைக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.நல்ல ஆட்சியை கவிழ்ப்பது சரியல்ல எனவும் அப்படி செய்தால் அம்மாவின் ஆன்மா சும்மா இருக்காது எனவும்,தவறு செய்தால் அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனவும் தெரிவித்தார்.எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க