August 13, 2018
தண்டோரா குழு
அதிமுக செயற்குழு கூட்டம் 20ம் தேதி நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 20ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.