August 13, 2018
தண்டோரா குழு
அதிமுகவில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கப்பட்டார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து,நேற்று அவரை கோவையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில்,கட்சி கட்டுப்பாட்டை மீறி சின்னசாமி செயல்பட்டதாக அதிமுகவில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமியை கட்சயில் நீக்கி இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.