• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக, திமுக எதிர்ப்பு காரணமாக விஷால் மனு மீதான பரிசீலனை இழுபறி நீடிக்கிறது

December 5, 2017 தண்டோரா குழு

நடிகர் விஷாலின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்எதிர்ப்பு காரணமாக பரிசீலனையில் இழுபறி நீடிக்கிறது.

டிசம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகரில் இடைதேர்தலில்,திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டிடிவி தினகரன், நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளனர்.

இத்தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதில் 139 பேர் தாக்கல் செய்தனர்.இதையடுத்து இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதுவரை மருது கணேஷ்,மதுசூதனன், கரு.நாகராஜன்,டிடிவி தினகரன் உள்ளிட்ட 31 வேட்பு மனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளது,29 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனு விண்ணப்ப படிவத்தில் உள்ள கையெழுத்தில் குளறுபடி இருப்பதாக எழுந்த புகாரையடுத்து நடிகர் விஷாலின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், நடிகர் விஷாலின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.எதிர்ப்பு காரணமாக விஷாலின் வேட்புமனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடிக்கிறது.

மேலும் படிக்க