September 28, 2018
தண்டோரா குழு
நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினரின் நடத்திய சோதனை திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி.தனது இயல்பான நடிப்பில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.பல வருடங்களுக்கு கால்ஷீட் புக் ஆகிவிட்ட நிலையில் செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படம் நேற்று வெளியானது.அடுத்தாக 96 படம் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில்,சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது.எனினும் இந்த சோதனை வழக்கமான ஒன்று தான் என்று வருமான வரித்துறையினர் பதிலளித்துள்ளனர்.