• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பி விவகாரம்: 21 ஆயிரம் ரூபாயில் போன் வாங்கி தந்த சிவக்குமார்!

November 2, 2018 தண்டோரா குழு

மதுரையில் நடந்த,தனியார் நிகழ்ச்சி ஒன்றில்,நடிகர் சிவகுமார் பங்கேற்றார்.அப்போது,வாலிபர் ஒருவர்,நடந்து வரும் போது போனில் செல்பி எடுத்தார்.இதனால், கோபமடைந்த சிவகுமார்,அவரது மொபைல் போனை,கீழே தள்ளி விட்டார்.இந்த காட்சி,சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து சிவகுமாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து,இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.அந்த வீடியோவில் ஆர்வமிக்க ரசிகர்கள்,கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படி தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள்.அதை திரைப்பட கலைஞன் பொறுத்து கொள்ள தான் வேண்டும். சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் எனது செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
என சிவகுமார் கூறியிருந்தார்.

இந்நிலையில்,செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் சார்பில் அந்த இளைஞருக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஒன்று நேரில் சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க