November 22, 2017
தண்டோரா குழு
தற்போது அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் இல்லை என்று சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது போருக்கு தயாராகுங்கள் எனக் கூறியிருந்தார். இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்த பிறகு போர் குறித்தும் அறிவிக்கப்படும் எனவும் தற்போது அரசியலுக்கு வரவேண்டிய அவரசம் இல்லை எனவும் கூறினார்.