October 9, 2018
தண்டோரா குழு
மன்சூர் அலிகானின் 2வது மனைவியான ஹமீதா மற்றும் அவரது மகன்,மகள் மீது 3வது மனைவி போலீசில் புகார் அளித்தார்.
கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மன்சூர் அலிகான்.ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில்,நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவியான ஹமீதா,மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் சேர்ந்து 3-வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதனிடையே,ஹமீதா தன் மீது தாக்குதல் நடந்த பொழுது,மன்சூர் அலிகான் வீட்டில் இருந்ததாகவும்,அவர் அமைதியாக இதை பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறி மன்சூர் அலிகான்,ஹமீதா,லைலா,மீரான் ஆகிய 4பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா,மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.