• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்- கமல்

May 14, 2018 தண்டோரா குழு

காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும் என மக்கள் நீதி மைய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா? அல்லது முகமையா? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது.இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தை பகிர்ந்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில்,சென்னையில் நடிகர் கமல்ஹாசன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கமல்ஹாசன்,

காவிரி உரிமையை படிப்படியாக இழந்து வருகிறோம்.தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிக மிக அவசியமானது.காவிரி விவகாரத்தில் தமிழர்களாகிய நமது ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்.மக்களின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்க வேண்டும்.காவிரி விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் வரும் 19-ம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும்.இக்கூட்டத்தில் கட்சிகளை கடந்து இளைஞர்கள்,ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.காவிரி பிரச்னையில் உரிய நீதி கிடைக்க கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன்,முதலமைச்சரை சந்திக்க தயாராக உள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.

மேலும் படிக்க