January 25, 2018
தண்டோரா குழு
தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசன் பிப்.21ம் ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று பெயரிட்டுள்ளார்.
“நாளை நமதே” எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தினாலும் பரவாயில்லை.தேசிய அரசியலை விட தமிழக அரசியலுக்கு தான் முக்கியத்துவம் தருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை மக்கள் நலன் மட்டும் தான் முக்கியம்.எதுவந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன் உடைப்பது வேலை அல்ல, கட்டுவதுதான் எனது வேலை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் பயணத்தின் தொடக்கமாக, கிராமம் ஒன்றை தத்தெடுத்து மேம்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள அவர், கட்சி தொடங்கிய பிறகு நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்பு உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.