• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கைதிகளின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

October 6, 2016 தண்டோரா குழு

சிறையில் நீண்ட காலமாக உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை போக்க சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிம்முன் அன்சாரி பேட்டி அளித்துள்ளார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு கைதி அப்துல் ஒசீர் அவர்கள் நேற்று உடல் நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணம் காவல் துறையின் அலட்சிய போக்கு என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.அவர் நெஞ்சு வலியால் பல முறை மருத்துவமனைக்கு வந்தும் உரிய சிகிச்சை அளிக்கவிடாமல் காவல்துறையினர் தடுத்து சிறைக்கு அழைத்து சென்று விட்டனர் எனவும் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சிறையில் குண்டு வெடிப்பு கைதிகளின் நிலைமையை பற்றி தெரிந்து கொள்வதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிம்முன் அன்சாரி கோவை மத்திய சிறைக்கு வந்தார்.

கைதிகளின் குறைகளை கேட்ட பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிறையில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் மன அழுத்தத்தில் உள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு உடல் நிலை குறைவு ஏற்படுகிறது. அதனை தீர்க்க சிறை துறை வளாகத்திலேயே மருத்துவர்களை கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும். கைதிகளுக்கு திடீர் உடல் நிலை குறைவு ஏற்படும் பொழுது அவர்கள் உயிரை காப்பாற்ற தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வசதிகளுடன் சிறைத்துறை மருத்துவமனை செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அப்துல்ஒசீர் அவர்கள் மரணத்திற்கு சிறை துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதனை குறித்து தமிழக அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் இனி ஒரு கைதி கூட இது போன்ற மரணம் நிகழாமல் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்துல் ஒசீர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க