• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.சி.சி சிமெண்ட் சார்பில் 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்!

November 28, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு ஏ.சி.சி சிமெண்ட் சார்பில் 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடும் சேதங்களை சந்தித்து.கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர்,தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதன்படி தனியார்,அரசு சாரா நிறுவனங்கள்,தனிநபர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி வருகிறார்கள்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்திற்கு கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் ஏ.சி.சி சிமெண்ட் நிறுவனம் சார்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மூன்று லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு குடும்பத்திற்கு தேவையான ஐந்து கிலோ அரிசி,ஒரு கிலோ பருப்பு,2 கிலோ சர்க்கரை,உப்பு,மசாலா பொடிகள்,புளி,மெழுகுவர்த்தி,பெட்ஷீட் உள்ளிட்ட 12 பொருட்களை ஒரு பெட்டியில் அடைத்து வைத்து மூன்று லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.மேலும் நிவாரண பொருட்களை விநியோகிக்கவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் அந்நிறுவன ஊழியர்களும் உடன் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க