• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மட் கட்டாயம்

August 11, 2016 தண்டோரா குழு

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மட் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுத்துவதால் வாகனம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யும் சட்டத்தையும் திருத்தி எழுத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். மீறினால் 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த மசோதாவைத் தாக்கல் செய்த சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, இந்த மசோதாவைத் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க