• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

January 11, 2018 தண்டோரா குழு

மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு தடை நீங்கி,பல்வேறு இடங்களில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்கான மாடுபிடி வீரா்கள் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதில் கலந்துகொள்ளும் ஜல்லிகட்டு வீரர்கள் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் என்று விழா கமிட்டி தெரிவித்துள்ளது.மேலும்,காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் மாடு பிடி வீரர்கள் ஏதேனும் அரசு அடையாள அட்டையை காண்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க