• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குங்குமப்பூ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

May 25, 2016 தண்டோரா குழு

ஒரு கிலோ குங்குமப்பூ பெறுவதற்கு அச்செடியின் 85,000 முதல் 1,40,000 மலர் மொட்டுகள் தேவைப்படும். அதனால் தான் இன்றும் உயர் ரக ஸ்பானிஷ் மஞ்சா என்னும் குங்குமப் பூவின் விலை பவுண்டுக்கு 3,750 பவுண்டுகளாக உள்ளது.

குங்குமப்பூ மலர் மொட்டுகள் சேகரிக்கப்படுவதைப் பற்றி கி.பி. 1600இல் வரையப்பட்ட ஓவியங்கள் மினோவன் அருங்காட்சியகத்தில் உள்ளன. தனது தலைமுடி ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பிய பேரரசர் அலெக்சாண்டர் குங்குமப்பூ சாற்றில் தனது தலை முடியைக் கழுவுவார் என்று கூறப்படுகிறது. இன்றைய தலை முடிக்குப் பயன்படுத்தும் வேதியியல் கலவையான ஷேம்பூவைப் போன்றது இந்தக் குங்குமப்பூ சாறு. அக்காலத்தில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட குங்குமப்பூ வைரத்தைப் போல மிக அரிதானதாக இருந்தது.

15ஆம் நூற்றாண்டு நியூரம்பர்க்கிலும், இங்கிலாந்தில் 8ஆம் ஹென்றியின் ஆட்சிக் காலத்திலும், குங்குமப் பூவுடன் வேறு வேறு பொருள்களைக் கலந்து விற்பனை செய்வது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. இக்குற்றம் புரிந்தவர்கள் கட்டி வைத்து எரிக்கப்பட்டனர் அல்லது அவர்களின் சட்டத்துக்குப் புறம்பான பொருள்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டனர். எஸ்ஸெக்சில் உள்ள சேஃப்ரான் வால்டன் என்ற நகரம் இந்த வாசனை திரவியப் பொருளான குங்குமப்பூவின் பெயரைக் கொண்டிருந்தது. இங்கிலாந்து நாட்டின் குங்குமப்பூ சந்தையின் மையமாக விளங்கியது இந்நகரம்.

திருடப்பட்ட குங்குமப்பூ மொட்டுகளைத் தன் கைத்தடியில் ஒளித்து வைத்துக் கொண்டு மத்திய ஆசியாவிலிருந்து வந்த பயணி ஒருவரின் மூலம் இது 14ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு வந்ததாக நாடோடிக் கதை ஒன்று தெரிவிக்கிறது. தேயிலை, காபி, வெண்ணிலா மற்றும் கொக்கோ ஆகியவை பயிரிடத் தொடங்கப்பட்ட காலத்தில் தான், குங்குமப்பூ பயிரிடுவது குறைந்தது. என்றாலும் அது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் முக்கியமான பயிராக விளங்கியது. மஞ்சள் என்னும் பொருள் தரும் அஸ்பார் என்னும் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றது சேஃப்ரன் என்னும் சொல்.

மேலும் படிக்க