• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து !

October 28, 2021 தண்டோரா குழு

கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் வானை முட்டும் அளவுக்கு புகை வெளியேறியதால் பரப்பரப்பு நிலவியது.

கோவை, ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்குச் சொந்தமான கார் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென எதிர்பாராத விதமாக குடோனில் இருந்து தீ பற்றி மளமள வென குடோன் முழுவதும் பரவியது.
இதனால் வானை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.

பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருப்பதால் தீ கட்டுக்கு அடங்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வருகிறது.

மேலும் இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் சாம்பலாகின. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க