• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

92 வயதில் 97 மனைவியர் நைஜீரியாவில் ஒரு நவீன தசரதன் !

October 19, 2016 தண்டோரா குழு

இந்திய இதிகாசமான இராமாயணத்தில் மரணத்தைத் தள்ளிப் போடுவதற்காக ஆயிரம் மனைவியரை மணந்துகொண்டு பல்லாண்டு வாழ்ந்து வந்தான் தசரதன் என்று கதை உண்டு.அதைப்போல, நவீன தசரதன் ஒருவர் நைஜீரியா நாட்டில் இருக்கிறார். 92 வயதான அவருக்கு 97 மனைவியர் உள்ளனர்.

அவர் மரணடைந்துவிட்டார் என்று செய்தி பரவியபோது, எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில், திடீரென்று தோன்றி, அதிர்ச்சி தந்தார். அது மட்டுமா, “எனக்கு 97 மனைவி போதாது, இன்னும் கூட திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகிறார்.

நைஜீரியா நாட்டின் பிட்டா மாவட்டம் அபுஜா என்ற நகரில் வசிப்பவர் முகமது பெல்லோ அபுபக்கர் (92). அவருக்கு தற்போது இருக்கும் மனைவியர்தான் 97. ஏற்கெனவே மொத்தம் 107 பேரை மணந்த அவர், 10 பேரை விவாகரத்து செய்துவிட்டார்.

இஸ்லாமிய மதத்தில் ஒரு மனிதருக்கு 4 மனைவிகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது இஸ்லாமிய சட்டம் என்பதால் அவருடைய 82 மனைவிகளை விவாகரத்து செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. ஆனால் அதனை ஏற்காத அபுபக்கர் தொடர்ந்து திருமணம் செய்து வந்தார்.

நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில், நோய்கள், அடிக்கடி ஏற்பட்ட போர்கள் காரணமாக ஆண்கள் அதிக அளவில் இறந்து வந்தனர். பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. போரின் விளைவாக பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் இல்லாதிருந்தனர். இதனால் அப்போது வாழ்ந்த இஸ்லாமியர் அல்லாத மக்கள் பல பெண்களை திருமணம் செய்து வந்தனர்.

நான்கு பெண்களுக்கும் சரிசமமாக பொருளாதாரம், நேரம் ஆகியவற்றை செலவிட முடிந்தால்தான் 4 திருமணம் செய்துக்கொள்ளலாம் இல்லாவிட்டால் ஒரு திருமணம் தான் என்று அறிவித்தார் நபிகள் நாயகம். ஆனால், இந்த நைஜீரிய ரோமியோ தனக்குத் தகுந்தவாறு இஸ்லாமிய சட்டத்தை மாற்றி வருவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அபுபக்கருக்கு 180க்கும் மேலான பிள்ளைகள் அவருக்கு உண்டு. அவர்களில் பலர் உயிருடன் தற்போது இல்லை.

அவர் இறந்து விட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் ஊடகங்கள் முன் தோன்றிய அவர், தான் இன்னும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், இன்னும் பல பெண்களை திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

“எனக்கு 97 மனைவிகள் இருக்கின்றனர். நான் உயிருள்ள நாள்வரை திருமணம் செய்துக்கொள்வேன் என்றும் நான் செய்வது தெய்வீக செயல் என்றும் என்னை விமர்சிப்பதை நிறுத்துங்கள், காரணம் நீங்கள் அவ்வாறு செய்வது உங்களை படைத்தவரை எதிர்த்து போர் செய்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க