• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9 புத்தகங்களை எழுதி 9 மணி நேரத்தில் 9 இடங்களில் வெளியிட்ட கோவையை சேர்ந்த சிறுமி !

August 20, 2021 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் மாணவி 9 புத்தகங்களை தானே எழுதி 9 மணி நேரத்தில் 9 இடங்களில் புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் புளியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ், ராஜலட்சுமி தம்பதியர் இவரது மகள்கள் ஹர்ஷவர்தினி, இளையமகள் ஹரி வர்ஷினி.இதில் ஹரிவர்ஷினி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதில் இருந்தே கதைகள் கேட்பதில் ஆர்வமுடைய ஹரிவர்ஷினி,தனது தாயாரின் உதவியுடன் ஒன்பது சிறுவர்களுக்கான கதைகளை எழுதியுள்ளார்.

மூணு கண்ண வந்துட்டான், குக்கூ குக்கூ தவளை, குகைக்குள் பூதம், காட்டுக்குள் திருவிழா, அரை பல காணம் ஐந்து பூதங்கள், மேக்கப் போட்ட விலங்குகள், காண்டாமிருகம் எதுக்கு ஓடுது,நிசாசினியின் மீன் பொம்மைகள் என ஒன்பது கதைகளை எழுதியுள்ளார். இவரது, கதைகளுக்கு இவரது சகோதரி ஹர்ஷவர்தினி ஓவியம் தீட்டியுள்ளார்.ஏற்கனவே இந்த சாதனைக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பாராட்டை பெற்ற சிறுமி ஹரிவர்ஷினி,தான் எழுதிய ஒன்பது புத்தகங்களை ஒன்பது மணி நேரத்தில்,ஒன்பது இடங்களில் வெளியிட்டு இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கோவை இரயில் நிலையத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்துறை உதவி பேராசிரியர் மணிகண்டன் வெளியிட ஸ்ரீஅன்னபூர்ணி எலக்ட்ரிக்கல் கோவை கார்த்தி புத்தகத்தை பெற்று கொண்டார்.ஒன்பது வயதில்,ஒன்பது வெவ்வேறு கதைபுத்தகங்களை எழுதிய சிறுமி ஹரிவர்ஷினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க