March 9, 2021
தண்டோரா குழு
உலகளவிலான ஸ்மார்ட் சாதனங்கள் பிராண்ட்களில் முன்னணி வகிக்கும் ஒப்போ, சமீபத்திய எஃப்19 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களான எஃப்19 ப்ரோூ 5ஜி மற்றும் எஃப்19 ப்ரோவை வெளியிட்டுள்ளது. அறிமுக விழாவில் நியூக்ளியாவின் அபாரமான செயல்பாடு அந்த இரவை உயிர்ப்பித்ததோடு, அதிலேயே திளைக்கும் வகையில் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி மாயஜாலமிக்க இசை இரவாக மாற்றியது.
குறைந்தபட்ச உள்ளடக்கத்துடன், இவை ட்ரெண்டை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எஃப்19 ப்ரோ சீரிஸ் உடன், ஆரோக்கியத்திற்கான உதாரணமாகவும் உடற்பயிற்சி துணைவனாகவும் இருக்கக்கூடிய ஒப்போ பேண்ட் ஸ்டைலையும் அறிமுகப்படுத்துகிறது ஒப்பேர் இது, உங்களது தினசரி வாழ்வோடு சிறப்பாக பொருந்திப்போகும்.
எளிதாகவும் நம்பிக்கையுடனும் படம்பிடிக்க ஒப்போ எஃப்19 ப்ரோூ 5ஜி உதவும். இதற்காக, மொபைலின் பின்புறத்தில் செயல்படும், செயற்கை நுண்ணறிவை முன்னிறுத்தும் போர்ட்ரெய்ட் வீடியோ அம்சத்துடன் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 48எம்பி குவாட் கேமிரா, 8எம்பி வைட் ஆங்கிள் கேமிரா, 2எம்பி போர்ட்ரெய்ட் மோனோ கேமிராக்கள், 2எம்பி மேக்ரோ மோனோ கேமிரா ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த சாதனத்திலுள்ள குவாட் கேமிராக்களின் ஸ்மார்ட் 5ஜி தொழில்நுட்பம், நீங்கள் உடனடியாக ஒரு நிபுணத்துவமிக்க வீடியோகிராபர் ஆவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது; புதிய வழிகளில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவுகிறது.
எஃப் சீரிஸில் ஒவ்வொரு முறையும் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தும்போது, ஒரு மத்திய தர ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் விரும்பும் விஷயங்கள் மேலும் அதிகமாகின்றன. ஏஐ ஹைலைட் போர்ட்ரெய்ட் வீடியோ, ஸ்மார்ட் 5ஜி, 50று ப்ளாஷ் சார்ஜ், எங்களது தனியுரிமமான சிஸ்டம் பெர்பார்மன்ஸ் ஆப்டிமைசர் ஆகியன ஒப்போ எஃப்19 ப்ரோூ 5ஜி பயன்படுத்துவதை மகிழ்ச்சிகரமானதாக்குகிறது. கலர் ஓஎஸ் 11.1 உடனான ஹார்ட்வேரின் தடையற்ற ஒருங்கிணைப்பு நம்பமுடியாத அளவுக்கு பயனர் அனுபவத்தை தருகிறது. இதுவே, எஃப்19 ப்ரோூ 5ஜி வெற்றி பெறுமென்ற நம்பிக்கையை விதைக்கிறது என்கிறார் ஒப்போ மொபைல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலர் தம்யந்த் சிங் கனோரியா.
மிக உயர்ந்த ஏஐ ஹைலைட் போர்ட்ரெய்ட் வீடியோவுடன் உங்கள் இரவுகளை வெளிப்படுத்தலாம்! ஒப்போ எஃப்19 ப்ரோூ 5ஜி-ன் பின்னால் இருக்கும் பெருமைக்குரிய 48எம்பி குவாட் கேமிரா செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அழகான, அருமையான போர்ட்ரெய்ட் படங்களைப் பதிவு செய்து, இந்த ஸ்மார்ட்போனை உண்மையாகவே போட்டோகிராபிக்கும் வீடியோகிராபிக்கும் அப்பால் இருக்கச் செய்கிறது. இதில் முதன்மையாக இருக்கும் 48எம்பி கேமிராவுடன் 8எம்பி வைட் ஆங்கிள் கேமிரா, 2எம்பி போர்ட்ரெய்ட் மோனோ கேமிராக்கள், 2எம்பி மேக்ரோ மோனோ கேமிரா ஆகியனவும் அடங்கியுள்ளன. இந்த நான்கு கேமிராக்கள் மற்றும் இந்த சாதனத்தின் ஸ்மார்ட் 5ஜி தொழில்நுட்பம் ஆகியன எந்த நேரத்திலும் உங்களை ஒரு வீடியோ மற்றும் புகைப்பட நிபுணராக இருக்க அனுமதிக்கிறது.
ஒளியைத் தானாகக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலமாக, ஏஐ ஹைலைட் போர்ட்ரெய்ட் வீடியோ அம்சமானது வீடியோ போர்ட்ரெய்ட்களை மேம்படுத்துகிறது. இரவின் குறைந்த ஒளி அல்லது பிரகாசமான பின்னணி என்று எதுவாக இருந்தாலும், ஒப்போ எஃப்19 ப்ரோூ 5ஜியில் போர்ட்ரெய்ட் வீடியோக்கள் உயிர்ப்புடன், தெளிவுடன், சமநிலையுடன், இயற்கையான சரும நிறத்தைக் காட்டும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எடுக்கப்படும் உருவப்படங்கள் இந்த ஸ்மார்ட்போனை உண்மையாகவே புகைப்படக்கலைக்கும் வீடியோகிராபிக்கும் அப்பால் இருக்கச் செய்கிறது. ஒருமுறை நீங்கள் படம்பிடிக்கும் வீடியோவின் வகையை செயற்கை நுண்ணறிவு உள்வாங்கிக்கொண்டால், அதற்கேற்றவாறு அல்ட்ரா நைட் வீடியோ அல்லது ஹெச்டிஆர் வீடியோ அல்காரிதம்கள் அல்லது இரண்டையும் பயன்படுத்தி அக்காட்சிக்கு ஒளியூட்டும். இரவு நேரங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் சிறப்பாக எடுப்பதை உறுதிப்படுத்த, தனியுரிம அல்காரிதம்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துகிறது அல்ட்ரா நைட் வீடியோ. புத்திசாலித்தனமான, நேர்த்தியான உருவப்படங்களை எளிதாகப் படம்பிடிக்க ஏற்ற சிறந்த அம்சமாக ஏஐ ஹைலைட் போர்ட்ரெய்ட் வீடியோ இருக்கும்.
டியூவல்-வியூ வீடியோ உடன் ஒரே நேரத்தில் முன்புற, பின்புற கேமிராக்களை இயக்கி உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள் என்பதையும் படம்பிடிக்க முடியும். வீடியோ ப்ளாக்கிங் செய்யவும், உங்களது தருணங்களை சமூக ஊடக தளங்களில் பகிரவும் ஏற்ற இந்த அம்சம், உங்களது வீடியோ உள்ளடக்கத்தினை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும்.
உங்களது கேமிரா குறிப்பிடத்தக்க அளவில் அசைந்து கொண்டிருந்தாலும், வீடியோவில் முதன்மையாக இருக்கும் பொருளைத் தானாக பின்தொடர்ந்து பதிவு செய்ய, இதிலுள்ள ஃபோகஸ் லாக் உதவும். அல்ட்ரா நைட் வீடியோ அம்சமானது தனியுரிம அல்காரிதம்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி அதிசிறப்பாக இரவு நேர வீடியோக்கள், புகைப்படங்கள் எடுப்பதை உறுதிசெய்யும்.
மேலும் ஒளி முரண்பாடுகள் குறைந்த ஒளி என்று சவால்கள் இருந்தாலும் தானாகவே அழகாகவும் தெளிவாகவும் வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்க ஏஐ சீன் என்ஹான்ஸ்மெண்ட் 2.0, டைனமிக் பொகே, நைட் ப்ளஸ் ஆகிய முதன்மை அம்சங்கள் இணைந்து உதவும். ஏஐ நைட் ப்ளேர் போர்ட்ரெய்ட், ஏஐ கலர் போர்ட்ரெய்ட், ஏஐ பியூட்டிபிகேஷன் 2.0, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ, 4கே வீடியோ உள்ளிட்ட இன்றியமையாத அம்சங்களும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்மார்ட் 5ஜியுடன் உங்களது வேகத்தை வெளிப்படுத்துங்கள் ஒப்போ ஸ்மார்ட் 5ஜி பொருந்தக்கூடிய தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட புதிய எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிவேக பதிவிறக்கத்தையும் பதிவேற்ற வேகத்தையும் உறுதிப்படுத்துகிறது. அதாவது, உங்களுக்குப் பிடித்தமான டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள், திரைப்படங்கள் மற்றும் மொபைல் கேம்களை இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஸ்ட்ரீம் செய்யலாம்; இதனுள் இருக்கும் மீடியாடெக் 5ஜி டைமென்சிட்டி 800யு சிப் ட்யூவல் மோடு 5ஜி சிம்மை (என்எஸ், எஸ்ஏ) ஆதரிக்கிறது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான எட்டு ஆற்றல்மிக்க கோர்களையும் வேகமான மெமரியையும் அதிகபட்சமாகப் பயன்படுத்துவது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வேகமாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தும்; சிறு துளியையும் தவிர்க்காமல் இசைக்கச் செய்யும்.
லேண்ட்ஸ்கேப் மோடில் விளையாடும்போது எஃப்19 ப்ரோூ 5ஜியை எப்படி பிடித்திருக்கிறீர்கள் என்பதையோ, போர்ட்ரெய்ட் மோடில் மின்னஞ்சல்களை எப்போது சரிபார்க்கிறீர்கள் என்பதையோ பொருட்படுத்தாமல் சமிக்ஞைகளை வைத்திருக்க உகந்ததாக உள்ளது 360 ஆண்டெனா 3.0.
ஒரு வைஃபை, ஒரு 4ஜிஃ5ஜி சேனலுடன் இணைப்பதன் மூலமாக உங்களது இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்தும் ட்யூவல் நெட்வொர்க் சேனல் அம்சத்தை அளிக்கிறது எஃப்19 ப்ரோூ 5ஜி. ஒரு கஃபே அல்லது கான்பரென்ஸ் ஹால் போன்ற அதிக கூட்டமுள்ள இடங்களில் வைஃபை சிக்னல் மிகக்குறைவாக இருக்கும்போது, இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும்.