January 11, 2021
தண்டோரா குழு
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் வாகனத்தின் புதிய பதிப்பை லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டி.வி.எஸ் நிறுவனம் கோவையில் தமது வாடிக்கையாளர்களுக்காக ஸ்கூட்டி பெப் ப்ளஸின் முதல் காதல் பதிப்பை ப்ரத்யேகமாக அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் குறைந்த விலையிலான, உயர்தர ஸ்கூட்டராக திகழும் டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸின், ப்ரத்யேக பதிப்பான முதல் காதல் மனதைக்கவரும் தனித்துவமான தோற்றத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக டி.வி.எஸ் ஸ்கூட்டி தமிழ்நாட்டு மக்களின் பல்வேறு போக்குவரத்துத் தேவைகளுக்கான முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. டி.வி.எஸ். வாகனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த ப்ராண்டிற்கும் இடையில் பிரிக்க முடியாத ஒரு உறுதியான உறவு உள்ளது, இந்த உறவைக் கொண்டாடும் விதமாக முதல் காதல் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில் அதன் முத்திரைச் சின்னம் தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழில் சின்னத்தை வடிவமைத்திருப்பது இரு சக்கர வாகனத் தொழில் துறையில் இதுவே முதல் முறை ஆகும். டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸின் ’முதல் காதல்’ பதிப்பில் நேர்த்தியையும் அழகையும் சேர்க்கும், அட்டகாசமான, கவர்ச்சியான சிறப்பு வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இவ்வாகனம் புதிய அழகிய வண்ணக் கலவைகளுடன் வருகிறது.
டிவி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்தியப் பெண்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இதன் மூலம், வாகனத் துறையில் தனக்கென ஒரு தனித்துவமிக்க இடத்தைப் பெற்றிருப்பதோடு, வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடர்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஸ்கூட்டர் ப்ராண்ட் 2019-ம் ஆண்டில் தனது 25-வது ஆண்டைக் கொண்டாடியது. டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் ப்ளஸ், தனது கவர்ச்சிகரமான தயாரிப்புகள், தரம் மற்றும், தனது வாடிக்கையாளர்களைச் சென்றடைவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட தனது தொடர் செயல்பாடுகளால், குறிப்பிடத்தக்க வகையில் பல சாதனை மைல்கல்களை எட்டியுள்ளது. தனது வாடிக்கையாளர்களின் பரிணாம வளர்ச்சியின், ஒவ்வொரு அம்சங்களுக்கும் ஏற்ற இருசக்கர வாகனமாக இருப்பதோடு,. நம்முடைய அன்றாட பயணங்களுக்கு மிகவும் ஏற்ற வாகனமாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் இ.டி. எஃப்ஐ இகோ த்ரஸ்ட் இன்ஜினால் இயக்கப்படுகிறது. இது 4 கிலோ வாட் சக்தியையும் 6.5 என்எம் முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. இ.டி. எஃப்ஐ இகோ த்ரஸ்ட் இன்ஜின், நுகர்வோருக்கு நீண்ட கால உழைப்பு, தங்கு தடையில்லாத இல்லாத செயல்பாடு மற்றும் சௌகரியமான வாகன சவாரியை உறுதி செய்கிறது. இத்துடன் 15 சதவீதம் அதிக மைலேஜ் மற்றும் மேம்பட்ட செயல்திறனையும் அளிக்கிறது. இதனால், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ், இந்தியாவின் மலிவு விலையிலான உயர் தர, ஸ்கூட்டராக தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்த பிரிவிலேயே மிகச் சிறந்த க்ரவுண்ட் ரீச்சபிலிட்டி மற்றும் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இதன் மூலம் சமதளம் அல்லாத கரடுமுரடான பகுதிகளில் கூட பயணிப்பது மிக வசதியாக அமைகிறது, இதன்மூலம், டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் நிறைவான, உற்சாகமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை உறுதி செய்கிறது. டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் டி.வி.எஸ் காப்புரிமை பெற்ற ஈஸி ஸ்டாண்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது வாகனத்தின் மத்தியில் இருக்கும் ஸ்டாண்ட் பயன்படுத்துவதில் இருக்கும் சிரமத்தை 30 சதவீதம் குறைக்கிறது.