• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

January 2, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கோவையில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சி பரமேஸ்வரன்பாளையம் கொங்கு திருப்பதி கோயில் மைதானத்தில் ‘மக்கள் கிராம சபை’ கூட்டம் இன்று காலை நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இக்கூட்டத்தை கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் தொடர்ந்து நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் 12,600க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோன்ற மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறோம். காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து, மூன்றாவது மாவட்டமாக கோவைக்கு வந்துள்ளேன். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதும், ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தினேன். அதை ஒப்பிட்டு பார்க்கிறேன். இப்போது நடக்கும் மக்கள் கிராம சபை கூட்டம்போல் மகிழ்ச்சி, எழுச்சியை நான் அப்போது பார்த்தது இல்லை. அதற்காக, இங்கு திரண்டுள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த கூட்டத்தை நடத்தக்கூடாது என இப்போதுள்ள அரசாங்கம் தடை விதிக்கிறது. இன்னும் நான்கு மாதம்தான் இந்த ஆட்சி நடக்க இருக்கிறது. அதற்குள் எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு கொள்ளையடிக்கிறார்கள். என்னென்ன அராஜகம், அக்கிரமம் நடத்தலாம்? திமுக மீது என்னமாதிரி பழி போடலாம்? திமுக மீது எந்தெந்த வழக்கு போடலாம்? யார் யாரை கைது செய்யலாம்? என துடிக்கிறார்கள். எத்தனை வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்ளும் பக்கும் பெற்ற கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அராஜகம் கோவை மாவட்டத்தில் நடக்கிறது. இதற்கு யார் காரணம்? என உங்களுக்கு தெரியும். உங்கள் ஊர் அமைச்சர்தான் இதற்கு காரணம். நான் வகித்த உள்ளாட்சி துறை பதவியைத்தான் அவரும் வகித்து வருகிறார். உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தேன் நான். அப்படி பெயர் எடுத்தவன் நான். ஆனால், இப்போதுள்ள உள்ளாட்சி துறை செயல்பாடு குறித்து வெட்கப்படுகிறேன். அந்த அளவுக்கு கேவலப்படுத்தியுள்ளனர். உள்ளாட்சி துறை, ஊழல்ஆட்சி துறையாக மாறிவிட்டது.

இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த கூட்டத்தை தடுப்பதற்கு என்னவெல்லாமோ திட்டம் தீட்டினார்கள். அதை முறியடித்து, நம் மாவட்ட பொறுப்பாளர்கள் வெற்றிகண்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். கோவையில் நம் தோழர்கள் சமீபத்தில் சில போராட்டம் நடத்தினார்கள். இதை பொறுக்க முடியாத ஆட்சியாளர்கள், காவல்துறையை ஏவிவிட்டு கைது செய்தனர். இன்னும் பத்து நமிடத்த்தில் திமுக தொண்டர்களை விடுவிக்கவில்லை என்றால், அடுத்த விமானத்தில் நான் கோவைக்கு வருவேன் என நம் நிர்வாகிகளிடம் டெலிபோனில் பேசினேன். இதை உளவுத்துறை மோப்பம் பிடித்து, ஆட்சியாளர்களுக்கு தெரிவித்து விட்டனர். இந்த மிரட்டலுக்கு பயந்து நம் தொண்டர்களை உடனே விடுவித்துவிட்டனர்.

அதிமுக ஆட்சியின் ஊழலை மக்களிடம் நாம் எடுத்து சொல்லிவிடக்கூடாது என திட்டம் போட்டு, இக்கூட்டத்துக்கு தடை விதிக்கின்றனர். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடாது. எங்களை கைது செய்யலாம். ஆனால், மக்கள் உணர்வை தடுத்து விட முடியாது. அந்த எழுச்சியைத்தான் இன்று பார்க்கிறேன். கடந்த டிசம்பர் 24ம்தேதி நம் கூட்டத்துக்கு திரண்ட, மக்கள் கூட்டத்தை பார்த்து ஆட்சியாளர்கள் மிரண்டு போய்விட்டனர். நமது ஊழல்களை எங்கே வெளியே கொண்டுவந்து விடுவார்களோ என அஞ்சி, இக்கூட்டத்தை தடுக்க முயன்றனர். ‘கிராம சபை கூட்டம்’ அரசுதான் நடத்த வேண்டும் என்றார்கள். அதனால், நாங்கள் ‘மக்கள் கிராம சபை’ கூட்டம் என நடத்துகிறோம்.

குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, பட்டா, ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்டம் என மக்களின் அடிப்படை பிரச்னை பற்றி விவாதித்து தீர்வுகாண, ஆண்டுக்கு மூன்று முறை கிராம சபை கூட்டம், உள்ளாட்சி துறை மூலம் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை. அதனால்தான், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, நாம், ஊராட்சி தோறும், கிராம சபை கூட்டம் நடத்தினோம். வேறு எந்த கட்சியும் இப்படி நடத்தவில்லை. அதன் எதிரொலியாக, தமிழகம்-புதுவையில் 40ல் 39 ெதாகுதியில் வெற்றி பெற்றோம். இன்று, பாராளுமன்றத்தில் மூன்றாது 3வது இடத்தில் நாம் இருக்கிறோம். அவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் தந்தீர்கள். அதேபோல், தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் 75 சதவீதம் வெற்றியை தந்தீர்கள். ஆளும்கட்சி அராஜகம், அதிகார துஷ்பிரயோகத்தை மீறி உள்ளாட்சி தேர்தலிலும் நாம் வெற்றி பெற்றோம்.

இன்று நடக்கும் இந்த கூட்டத்துக்கு போட்டியாக, அதிமுகவினர் நடிகையை வரவழைத்து இதே தொகுதயில், நாளை பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். பால் மனம் மாறாத மந்திரி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசுகிறாராம். அவர், பலூன் உடைப்பதில் கில்லாடி. அரகூ விழாவுக்கு சென்ற அவர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், ேதாரணத்தில் கட்டியிருந்த பலூனை ஒவ்வொன்றாக உடைத்தவர். எவ்வளவு கேவலம்? இதுவா மந்திரி வேலை? இங்கு அலங்கரித்து கட்டியுள்ள பலூன்களை கழக தொண்டர்கள் பத்திரமாக கழற்றி சென்றுவிடுங்கள். இல்லையேல், அவர், பலூன் உடைக்க வந்துவிடுவார்.

மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் தெம்பு,துணிவு, ஆற்றல் அதிமுக மந்திரிகளிடம் இல்லை. உள்ளாட்சி துறையில் எல்இடி தெருவிளக்கு மாற்றியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஒரு பல்பு விலை 450 ரூபாய். ஆனால், 3,737 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். இது, முதல் ஆண்டு ரேட். அடுத்த ஆண்டு 4,150 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு எழுதியுள்ளனர். இதில், இன்னொரு வகை விளக்கு உள்ளது. அதன் விலை ரூ.1,550. ஆனால், இதை 14,919 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். இப்படி எந்த பொருள் வாங்கினாலும் ஊழல். அதனால்தான், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எல்லா அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக கவர்னரிடம் வழங்கியுள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம். இல்லையேல், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது உறவினர்களுக்கு அரசு பணிக்கான காண்ட்ராக்ட் கொடுத்து பல கோடி ரூபாய் ஊழல் செய்தள்ளார். இதை, ஆதாரத்துடன் நீதிமன்றதில் சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தோம். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, இதில் உண்மை உள்ளது எனக்கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தை நாடி, இடைக்கால தடை வாங்கி வந்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சும்மா விட மாட்டோம். இது யார் வீட்டு பணம்? அரசாங்கத்தின் பணம், மக்கள் தரும் வரிப்பணம். ஊழல்வாதிகளை நிச்சயம் சிறையில் அடைப்போம்.

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை மு.க.ஸ்டாலின் நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து விலகத்தயார் என இத்தொகுதியை சேர்ந்த அமைச்சர் வேலுமணி சவால் விட்டுள்ளார். அவரது சவாலை நான் ஏற்கிறேன். நான், நிரூபித்து காட்டுகிறேன். இன்னும் நான்கு மாதம் மட்டும் பொறுத்திருங்கள். நீங்கள் அரசியலில் இருந்து விலகினால் மட்டும் போதாது, சட்டத்தின் முன் நிற்கவைத்து, உங்களுக்கு தண்டனை வாங்கித்தரும் வேலையை இந்த மு.க.ஸ்டாலின் செய்வார்.

இங்கு பெண்கள் அதிகளவில் திரண்டு உள்ளீர்கள். அதுவும் அமைதியாக இருக்கிறீர்கள். இதை பார்க்கும்போது நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி தரப்போகிறீர்கள் என தெரிகிறது. திமுக, ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்றும் ஒரே கட்சி. கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இல்லை. எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். மக்கள் பிரச்னைக்காக போராட நாங்கள் ஒருபோதும் தயங்கியது இல்லை.

ஜெயலலிதா இருந்தவரை மந்திரிகள் பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்தனர். எந்த மந்திரி எங்கு இருக்கிறார் என தெரியாது. ஆனால், இப்போது ஆட்டம் போடுகிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார்கள். ஆனால், இப்போது, அந்த மர்மம் மறைந்து விட்டது. நாங்கள் சும்மா விடமாட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி கண்டுபிடித்து, உரியவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க