• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடியில் ஆல்ஃபா லாவல் நிறுவனம் அமைத்திருக்கும் வாட்டர் ஏடிஎம்களின் செயல்பாடு ஆரம்பம்!

December 23, 2020 தண்டோரா குழு

வெப்பமாற்றுகை, பிரித்தல் மற்றும் திரவ கையாளல் ஆகியவற்றிற்கான தயாரிப்பு பொருட்கள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ஆல்ஃபா லாவல், தூத்துக்குடியில் இரு அமைவிடங்களில் வாட்டர் ஏடிஎம்களை அமைத்து, அதன் செயல்பாடுகளை இன்று தொடங்கியுள்ளது.

இதன் தொடக்கவிழா நிகழ்வில் தூத்துக்குடி நகராட்சியின் ஆணையர் வி.பி. ஜெயசீலன் கலந்துகொண்டார்.இதனைத்தொடர்ந்து, குத்து விளக்கேற்றி, வண்ண ரிப்பனை வெட்டியதோடு, தேங்காய் உடைக்கும் நிகழ்வினை நகராட்சி ஆணையர் மேற்கொண்டார்.

நகராட்சி ஆணையர் இந்நிகழ்வில் பேசுகின்றபோது,

மாவட்டத்தில் இத்தகைய நீர் சுத்திகரிப்பு ஆலை முதன்முறையாக அமைக்கப்படுகிறது. பிற நகராட்சி பகுதிகளிலும் இவை போன்று இன்னும் அதிகமாக நிறுவப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம். பிற பகுதிகளும் இந்த சுத்திகரிப்பு நிலையங்களால் பயனடைவதற்காக அருகிலுள்ள பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு இது பற்றிய செய்தியினை வலரும் அறியுமாறு செய்ய வேண்டும். இன்னும் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தொடங்குவதற்கு நாங்கள் நிச்சயம் உதவுவோம். இந்த நிலையத்தை தொடங்கி வைப்பதில் நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தூய குடிநீரை வழங்கும் இச்செயல்திட்டத்தோடு தொடர்புடைய ஆல்ஃபா லாவல் நிறுவனத்திற்கும், அதன் அதிகாரிகளுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இப்பகுதிகளில் அமைந்துள்ள வசதி குறைவான மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 3000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த வாட்டர் ஏடிஎம்கள் தூய்மையான நீரை வழங்கி, அவைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமென எதிர் பார்க்கப்படுகிறது. ஆல்ஃபா லாவல் இந்தியா நிறுவனத்தின் மரைன் மற்றும் சர்வீஸ் பிரிவின் துணைத்தலைவர் ராம்தாஸ் சலூன்கே, மெய்நிகர் முறையில் இந்த இரு வாட்டர் ஏடிஎம்களையும் தொடங்கி வைத்தார். ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தொடக்கவிழா நிகழ்வில் ராம்தாஸ் சலூன்கே உடன், சிஎஸ்ஆர் மேலாளர் லலிதா வாசு, தகவல்தொடர்பு மற்றும் பிராண்டு துறையின் தலைவர் ரஜிதா குமார் மற்றும் பிராந்திய விற்பனை மேலாளர் கே. பரமேஸ்வரன் உட்பட ஆல்ஃபா லாவல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஸ்பிக் நிறுவனத்தின் உற்பத்தி துறை தலைவர் பழனிச்சாமி மற்றும் வாட்டர் லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன் ரன்போர் ஆகியோரும் ஆன்லைன் வழிமுறையில் இந்நிகழ்வில் பங்கேற்றனர். முககவசம் அணிவது, சமூக இடைவெளி பராமரிப்பது மற்றும் கைகளை தூய்மையாக்குவது போன்ற தொற்று இடருக்கான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வதற்காக இந்த அமைவிடங்களில் இந்நிறுவனத்தின் இரு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த நீர் சுத்திகரிப்பு ஆலைகள், சூரியஒளி மின்சாரத்தின் மூலம் இயங்குகின்ற கிளவுட் மேலாண்மையின் கீழான 10 சுத்திகரிப்பு நிலைகள் கொண்ட பணமில்லாமல் செயல்படுகின்ற வாட்டர் ஏடிஎம்களாகும். இந்த ஆலையானது, 10 நிலைகள் கொண்ட முழுமையான தானியக்க செயல்பாடுள்ள நீர் சுத்திகரிப்பு அமைப்பாகும். இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 1000 லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். ஒரு நாளைக்கு 8 மணி நேரங்கள் இயங்கக் கூடியவையாகும். இது அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அமைவிடத்திலும் ஒரு நாளைக்கு 8000 லிட்டர் வரை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கமுடியும்.

கோடை காலத்தின்போது குளிரூட்டப்பட்ட நீரை வழங்குவதற்கான வசதிகளும் இந்த வாட்டர் ஏடிஎம்களில் இருக்கின்றன. 8 மணி நேரங்கள் வரை மட்டுமே இந்த ஆலைகள் இயங்கக்கூடியவைகள் என்றாலும், ஆலைக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள சென்சார் பேனல்கள் மற்றும் தொடர்பற்ற குழாய்கள் வழியாக, இப்பகுதிகளில் வாழும் மக்களால் 24 மணி நேரமும் நீரை சேகரிக்க முடியும். இந்த ஏடிஎம்களில் தூய குடிநீரானது, 20 லிட்டர் கேன் ஒன்றுக்கு ரூ.7- என்ற கட்டுபடியாகக்கூடிய விலையில் வழங்கப்படுகிறது. பதிவு செய்முறையுடன் கூடிய ஒரு ப்ரீ-லோடட் (முன்பே பணம் செலுத்தியிருக்கும்) அட்டையை பயன்படுத்தி, நீரை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு நாளுக்கு இரண்டு கேன்கள் வரை ஒவ்வொரு குடும்பமும் நீரை பெற்றுக்கொள்ளலாம். ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் குடிநீர் தேவையை இது பூர்த்தி செய்யும். இந்த குடிநீருக்காக வசூலிக்கப்படும் தொகையானது, இந்த ஏடிஎம்மின் பராமரிப்பு செலவிற்கும் மற்றும் ஆலையின் ஆபரேட்டர் ஊதியத்திற்கும் பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியின்போது பேசிய ராம்தாஸ்,

“மக்களின் தினசரி வாழ்க்கையில் இருந்து வரும் சூழல்களை சிறப்பாக ஆக்குவது மீது ஆல்ஃபா லாவல் – நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கான அணுகுவசதியை செய்து தருவது என்பது இந்த குறிக்கோளை நோக்கிய அடிப்படை செயல்பாடுகளுள் ஒன்றாகும். இப்பிராந்தியத்தில் நாங்கள் நிறுவியிருக்கும் 6 வாட்டர் ஏடிஎம்களும் திறம்பட பயன்படுத்தப்படுவதை காண்பது மனதிற்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருகிறது. இன்றைக்கு இன்னும் இரண்டு வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகின்றன. இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பது நிச்சயம். இந்த யூனிட்டுகள் ஒவ்வொன்றிலுமிருந்தும் ஒவ்வொரு மாதமும் சுமார் 2000 முதல் 3500 மக்கள் ஒரு இலட்சம் லிட்டர் தூய்மையான குடிநீரைப் பெறுவார்கள். சமுதாயத்திற்கு எமது பங்களிப்பை இதன்மூலம் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். சமுதாயத்தின் மேம்பாடு என்ற குறிக்கோளை இலக்காக கொண்டு எங்களால் முடிந்தவரை சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்கான எமது முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் குறைவான சேவை கிடைக்கப்பெறுகின்ற பகுதிகளில் தனித்து செயல்படுகின்ற நீர் சுத்திகரிப்பு ஆலைகளை கட்டமைத்து இயக்குவதில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட ஒரு சமூக தொழில்முனைவு அமைப்பான வாட்டர்லைஃப் – ஐ, இந்த வாட்டர் ஏடிஎம் செயல்திட்டத்திற்கு தனது அமலாக்க பார்ட்னராக ஆல்ஃபா லாவல் இணைத்துக் கொண்டிருக்கிறது. இச்செயல்திட்டமானது, 10 ஆண்டுகள் காலஅளவிற்கு வாட்டர்லைஃப் அமைப்பால் பராமரிக்கப்படும் மற்றும் இந்த ஆலைகளின் வாழ்நாள் காலம் 25 ஆண்டுகளாகும். இந்த முனைப்புத்திட்டமானது, இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும். இது அமைந்துள்ள ஒவ்வொரு அமைவிடத்திலும் ஆலையை இயக்கும் பணியாளராக இவர்கள் பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் படிக்க