• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக அரங்கில் உருளிக்கல் கணித ஆசிரியர் – தமிழகமே உற்றுநோக்கும் வசந்தகுமார்

December 22, 2020 தண்டோரா குழு

கணக்கு பாடம் மட்டும் தான் புரியவே மாட்டேங்குது. எல்லா பாடத்திலேயும் நல்ல மதிப்பெண். டியூசன் வைத்தால் தான் கணக்கு புரியும். இந்த வார்த்தைகளை நம் வீட்டில், பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில் பிள்ளைகள் சொல்ல கேட்டிருப்போம். ஏன் நமக்கு கூட அந்த எண்ணம் தோன்றியிருக்கும். சினிமாவில் கணித ஆசிரியர் என்றால் கடுமையானவர்; சிடுமூஞ்சி என்று வர்ணிப்பர். வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் திட்டுவார் என காட்சிகளை சித்தரித்திருப்பார்கள். நிஜமாகவே கணக்கு பிணக்கு தானா. கணக்கு கசக்குமா. இல்லவே இல்லை. எதையும் ஆர்வத்தோடு புரிந்து கற்றுக் கொண்டால், புரிந்து கொண்டால்
கணிதமும் கற்கண்டு தான் விளக்குகிறார் கணித ஆசிரியன் கா.வசந்தகுமார்.

இவர் கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு அருகில் உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பெரும்பாலும் மாணவர்களுக்கு கணிதம் என்றாலே எட்டிக்காயாகக் கசக்கும். அந்த மனநிலையை மாணவர்களிடத்தில் மாற்றுவதற்கு பல்வேறு வழிமுறையை நடைமுறைப்படுத்தி, அதில் அவர்கள் விரும்பும் வகையில் துணைக்கருவிகளைப் பயன்படுத்தி விளையாட்டு முறையில் கற்பித்து வருகிறார். அனைத்து கணித கருத்துகளுக்கும் துணைக்கருவிகள் தயார் செய்து கணித ஆய்வகத்தை உருவாக்கி உள்ளார். இதை மாணவர்கள் எவ்வாறு செலவின்றி தயாரிப்பது (No cost and Low Cost Teaching Learning mstetials) பயன்படுத்துவது என்பதனை கணித மன்றத்தின் மூலமாக கற்பித்து வருகிறார்.

கணிதக்கருத்துகளுக்கு பாடல்களை எழுதுவதும், அவற்றிக்கு மெட்டமைத்து ஆயத்தப்பாடல்களாக (Motivational Songs) பாடி மாணவர்கள் மனதில் பதிய வைப்பதும் இவரது தனிச் சிறப்பென்றால் அஃது மிகையாகாது. இது மற்ற மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் காணொளிகளாக மாற்றம் செய்து Youtube வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனைப் பல்வேறு பகுதி மாணவர்களும், ஆசிரியர்களும் பார்த்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இவர் நடத்தும் பாடங்களைக் காணொளிகளாகத் தயார் செய்து புத்தகத்தில் உள்ளது போல விரைவு குறியீடுகளாக (Q.R Code) மாற்றி பயன்படுத்த பயிற்சி அளித்து வருகிறார். இவரது சிறப்பான கற்பித்தல் பணியினைப் பாராட்டி தமிழ்நாடு ஆசிரியர் வலைதளம் இவருக்கு 5 பாராட்டுச் சான்றிதழ்களையும், தீக்சா வலைதளம் இவரது மூன்று காணொளிகளை பதிவேற்றம் செய்து சிறப்பித்துள்ளது.
வருங்கால சந்ததியினருக்கு
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற கருத்தினைப் புகுத்த சிறப்பு நாட்களில் மரம் நடுவிழா நடத்தி, அதனை நடைமுறைப்படுத்தவும் ஊக்குவித்து வருகிறார்.

ஏழாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எட்டாம் வகுப்பில் தேசிய வருவாய் திறனறித் தேர்வு (NMMS) எழுத முடியும். இதில் SAT, MAT என்ற இருபெரும்பிரிவுகளில் தலா 90 மதிப்பெண்களுக்கு (மொத்தம் 180) தேர்வு எழுத வேண்டும். SAT தேர்விற்கு ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பாடங்களைப் படிக்க வேண்டும். MAT தேர்விற்கு மனத்திறன் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும்.(Objective Type Questions like Railway and Bank examination) இவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியளித்தன் விளைவாக 3 மாணவர்கள் தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) வெற்றி பெற்று தமிழக அரசிடமிருந்து ₹.1000 மாதந்தோறும் பெற்று வருகின்றனர்.

2018-’19ம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற State Level Achievement Survey ல் (SLAS) இரண்டு மாணவிகள் கணித பாடத்தில் 12 க்கு 12 முழு மதிப்பெண் எடுத்துள்ளனர்.கொரோனா காலகட்டத்திலும் கணித கருத்துகள் மாணவர் மத்தியில் சென்றடைய இணையவழிக் கல்வி மூலமும், புலனவழிக் கல்வி மூலமும் கற்பித்து வருகிறார். இணைய வழியில் தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்கு ஆலோசனை அளித்து வருகிறார்.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி தன்னார்வ அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் இணைந்து வானமாமலை விருது, Dr.இராதாகிருஷ்ணன் விருது,கல்வி ரத்னா விருது,ஆசிரியர் சிற்பி விருது,ஆளுமை ஆசிரியர் செம்மல் விருது,தமிழறிஞர் அண்ணா விருது, அறிவுச்சுடர் காந்தி விருது,கனவு ஆசிரியர் விருது,அருட்ஜோதி விருது, தமிழ் விஞ்ஞானி விருது, கலாம் அறிவு மாமணி விருது,கலாம் கனவு நாயகன் விருது 2020, சர்தார் வல்லபாய் படேல் தேசிய விருது 2020,ஆசிரியர் மாமணி விருது,INTERNATIONAL EDUCATOR’S HONOUR AWARD,BEST TEACHER AWARD, தேசத்தின் சிற்பி, திருவள்ளுவர் விருது, தாயுமானவர் விருது, KALAM DREAM STAR AWARD, Indias Hope Star Award வழங்கியும்,
Indiaan World Records என்ற அமைப்பானது இவருக்கு Best Teacher Award, Best Achiever Award, WORLD PEACE AWARD 2020, BEST ACHIEVER AWARD 2020,BEST HUMANITY AWARD 2020, MAN OF EXCELLENCE AWARD 2020 வழங்கியும் கௌரவப்படுத்தி உள்ளது.

அன்றாட வாழ்க்கையில் கணிதத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை எளிமைப்படுத்தியதாலும்,கணக்கு,பிணக்கு, வணக்கு,ஆமணக்கு என்ற நிலை மாறி கணக்கும் இனி இனிக்கும் என்ற நிலையை உருவாக்கியதாலும் ஒசூர் தாயுள்ளம் அறக்கட்டளையின் உலக சாதனைகளுக்கான சிறந்த ஆசிரியர் விருதினை தாயுள்ளம் வேதமூர்த்தி அவர்களும், திருச்சி காவேரி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.சசிரேகா அவர்களும் இணைந்து வழங்கிச் சிறப்பித்தனர். இது இவர் இந்த ஆண்டில் பெற்றுள்ள 37 ஆவது விருதாகும்.

மேலும் AKS என்ற புதுதில்லியிலுள்ள அமைப்பானது 110 நாடுகள் கலந்து கொண்ட உலகளாவிய ஆசிரியர் விருது 2020 ஐ முகநூல் இணையவழியில் இந்தியா மற்றும் தமிழகத்தின் சார்பில் இவருக்கு வழங்கி கௌரவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க