• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இதுவரை 2882 உணவு மாதிரிகள் பரிசோதனை – 612 சிவில், 523 கிரிமினல் வழக்குகள்

December 11, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் குழுக்கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் சரியான உணவை சரியான விகதத்தில் சாப்பிட்டு ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் விதமாக ‘ஈட் ரயிட் சேலஞ்ச்’ (Eat right challenge) திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அனைத்து உணவு வணிகர்களும் பாதுகாப்பான, சுகாதார உணவை விற்பனை செய்ய ‘எப் எஸ் எஸ்’ சான்று பெற வேண்டும். பள்ளி, கல்லூரி, அங்கன்வாடி மையம், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளில் ‘ஈட் ரயிட் கேம்பஸ்’ என்ற சான்று பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஜ்ஜி, வடை போன்ற நொறுக்கு தீனி உணவு பொருட்களுக்கு பதிலாக சுகாதாரமான மற்றும் ஊட்டச்சத்தான உணவை அனைவரும் உட்கொள்ள வேண்டும். உணவு பொருட்களில் உள்ள கலப்படத்தை கண்டறியும் முறை பற்றி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் பேக்கரி, கேட்டரிங் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றில் ஒரு நாளைக்கு சுமார் 40-50 லிட்டர் அளவுக்கு மேல் எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. மீதமாகும் பயன்படுத்திய எண்ணெய்யை அரசால் நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்த எண்ணெய் மறு சூழற்சியில் பயோ எரிபொருளாக மாற்றுவதற்கு உரிய நிறுவனத்திற்கு முறையாக விற்பனை செய்ய வேண்டும்.

இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அன்னதானம் மற்றும் பிரசாத கூடங்கள், கோயில்கள் போன்றவை உணவு பாதுகாப்பு துறையின் பதிவு உரிமம் பெற்று தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 2882 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 612 சிவில் வழக்குகள் பெறப்பட்டு மாவட்ட தீர்ப்பு அலுவலர் மூலம் 381 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.50 லட்சத்து 82 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 523 கிரிமினல் வழக்குகளில் 127 வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையுடன் ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த சில்லரை வணிகர்கள் மற்றும் தரமில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.9.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தரக்குறைவான உணவு, கலப்பட உணவு பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் சம்பந்தமான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் புகார் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளராசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன், உணவக உரிமையாளர்கள் சங்கம், பேக்கரி விற்பனையாளர் சங்கம், வணிக சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பு சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க