• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

86 வயதில் முதல் புத்தகம் எழுதி வெளியிட்ட கோவை பெண்மணி!

January 4, 2024 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த பாலம் சுந்தரேசன் எனும் பெண் தனது 86 வயதில் Two Loves and Other Stories (இரண்டு காதலும் பிற கதைகளும்) என்ற தலைப்பில் தனது முதல் புத்தகத்தை இன்று மாலை 7 மணி அளவில் அண்ணா சாலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் வெளியிட்டார்.

இந்த புத்தகத்தை ‘கல்வி துணை’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் வி.சிவசுவாமி வெளியிட்டார்.இந்த புத்தகத்தில் பாலம் சுந்தரேசன் ஆங்கிலத்தில் எழுதிய 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன.தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைச் சம்பவங்களை கதைகளாக எழுதுவதை வழக்கமாக கொண்ட இவர், தனது சிறு வயதிலிருந்தே பத்திரிகைகளில் கதைகள் எழுதியிருக்கிறார்.

கதம்பம் என்ற வலைப்பதிவிலும் தொடர்ந்து எழுதி கொண்டுள்ளார்.இப்போது அவரின் கதைகள் புத்தக வடிவம் பெற்று வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் அவ்வகையில் உலக புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் பாணியைப் போலவே இருக்கும்.கருட பிரகாஷன் என்ற வட இந்தியாவைச் சேர்ந்த பதிப்பகத்தால் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க