சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் அந்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன என பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் காணொளி ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பருந்து அரேபிய நாட்டின் தேசிய பறவையாக உள்ளது. எனவே, அவைகள் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. விமானத்தில் பறக்க கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பருந்துகள் விமானத்தில் பயணிப்பது இது முதல் முறை அல்ல. ஆனால் ஒரே சமயத்தில் 80 பருந்துகள் விமானத்தில் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.
பருந்துகளின் பாதுகாப்பு கருதி விமானத்தில் பயணிக்கும் போது அவைகளின் கண்கள் கட்டப்பட்டு , விமான இருக்கைகளின் கீழ் பகுதியில் கால்கள் கட்டப்பட்டிருந்தன. மனிதர்கள் அதன் அருகில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அந்த பறவைகளின் கையாளர்கள் என கருதப்படுகின்றன.
பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் காணொளி ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் பிரசுரமாகி வைரலாக பரவி வருகிறது. இதை தனது விமானி நண்பர் வழங்கியதாக அதை வெளியிட்டவர் தெரிவித்தார்.
மற்றொருவர் கூறுகையில், “அவை பருந்துகள் அல்ல மாறாக பால்கன் பறவைகள்” என்றார்.
இன்னொருவர் கூறுகையில், “எதிஹாத் அல்லது எமிரேட்ஸ் அல்லது கத்தார் விமானத்தில் பறக்கும் போது, விமானத்தின் முதல் வகுப்பில் பயணிக்கும் நபர், பால்கன் பறவையை அருகில் வைத்திருப்பதை காண முடியும்” என்றார்.
இன்டர்நேஷனல் அச்சொசியாடின் ஆப் பால்கோனரி அண்ட் கன்சர்வேசன் ஆப் பேர்ட்ஸ் அண்ட் ப்ரே நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய கிழக்கு நாடுகளின் காணப்படும் இந்த பறவைகள், உலகம் முழுவதிலும் நடக்கும் வேட்டை போட்டிகளில் கலந்துக்கொள்ள கூடியவை” என்றது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 41 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்