• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

80விநாடியில் டோன்ட் கேக்கை சாப்பிட முயன்றவர் மரணம்

April 6, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வரில் ஒரு கிலோ எடை கொண்ட, டோனட் கேக்கை 80 விநாடியில் சாப்பிட முயன்றவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகரானடென்வர் நகரின் தோர்ன்டன் பகுதியை சேர்ந்தவர் ட்ராவிஸ் மலூப் (42). இவர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி வூடு டோனட்ஸ் கடை நடத்திய டோனட் என்னும் கேக் வகையை உண்ணும் போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் கலந்துக்கொண்ட ட்ராவிஸ், 80 வினாடிகளில் டோன்ட் கேக்கை சாப்பிட முயன்றபோது மூச்சு திணறி உயிரிழந்தார்.

“தொண்டையிலுள்ள காற்று குழாயில் உணவு சிக்கி கொண்டதன் விளைவாக மூச்சு திணறல் ஏற்பாட்டு ட்ராவிஸ் உயிரிழந்தார்” என்று பிரேத பரிசோதனை செய்த அதிகாரி தெரிவித்தார்.வூடு டோன்ட்ஸ் கடை வரிசையில் நின்றுக்கொண்டிருந்த ஜூலியா ஏடேல்ஸ்டீன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:3௦ மணியளவில் ட்ராவிஸ் டோனட்டை உண்ண முயற்சி செய்துக்கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டது. அவருக்கு பலர் உதவி செய்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்” என்றார்.

மேலும் படிக்க