• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

80வது வார்டில் பொது சுகாதாரக்குழு தலைவர் ஆய்வு

June 3, 2022

கோவை மாநகராட்சி 80 வது வார்டுக்குட்பட்ட சுகாதார அலுவலகத்தில் மாநகராட்சியின் பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தூய்மை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் 80 வது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை நேரிடையாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளான தெருவிளக்கு வசதி, பாதாள சாக்கடை வசதி, தார்சாலை வசதி, புதிய அங்கன்வாடி அமைத்தல், நியாய விலைக்கடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் அப்பகுதியில் அமைந்திருக்கும் பொது கழிப்பிடத்தை பார்வையிட்டு தூய்மை பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் படிக்க