• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம்

December 2, 2017 தண்டோரா குழு

மும்பை விமானநிலையத்திலிருந்து புறப்பட ஏர் இந்தியா விமானம் தாமதம் ஆனதால், பயணிகள் விமான ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்திலிருந்து, அகமதாபாத் விமானநிலையத்திற்கு, 200 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை இரவு சுமார் ௦1:35 AI 031 என்ற விமானம் புறப்படுவதாக இருந்தது.
எதிர்பாரதவிதமாக, விமானத்தை இயக்க விமான ஓட்டுனர் யாரும் இல்லை என்பதால், விமானம் புறப்பட ஒருமணி நேரம் தாமதம் ஆனது. அதன் பிறகும், விமானத்தை இயக்க யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து, விமானநிலையத்தில் உள்ள போர்டிங் பகுதியிலேயே, பயணிகள் இரவு நேரத்தை கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

“Flight Duty Time Limitation(FDTL) காரணமாகதான், விமானம் புறப்பட தாமதம் ஆனது. சுமார் 7 மணிநேரம் தாமதமாக, சனிக்கிழமை காலை 08:20 மணிக்கு விமானம் புறப்பட்டது” என்று ஏர் இந்திய நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.

விமான ஓட்டுனர்கள் மற்றும் விமான ஊழியர்களின் பணி நேரங்களை Directorate General of Civil Aviationஅமைக்கிறது. இதனால், அந்த பணி நேரத்தை மீறி, விமான ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க