• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காக அரசுக்கு அளிக்கிறோம் – சத்குரு

April 27, 2021 தண்டோரா குழு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசுக்கு அளிக்கிறோம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய #கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதேபோல், கடந்தாண்டு கரோனா நிவாரணப் பணிகளுக்காக சத்குரு தனது பங்களிப்பாக மட்டும் ரூ.11.54 கோடியை வழங்கினார்.

இந்நிதி அவரது ஓவியங்களை ஆன்லைனில் விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்டது. மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, கசாயம் வழங்கி அவர்களின் பசியை போக்கினர். மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் PPE kit போன்ற உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கும் பணிகள் இப்போதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க