• Download mobile app
09 Aug 2020, SundayEdition - 1642
FLASH NEWS
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது!
  • சென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
  • கோவையில் 5000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு
  • மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!
  • EIA2020 சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு..!
  • கோவையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது
  • தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்
  • கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ
  • 6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.56 லட்சத்தை கடந்தது..!
  • இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் 61.53% பேர் குணமடைந்துள்ளனர்
  • மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி
  • கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி
  • கொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
  • தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
  • ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி
  • ஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை?
  • இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை
  • கடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா !
  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்!
  • ஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு
  • தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு!
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்த நபர் – வைரலாகும் வீடியோ

August 1, 2020 தண்டோரா குழு

கோவை செங்காளிபாளையம் பகுதியில் 8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த நபரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பாம்பை பிடித்து வரும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒருவீட்டின் அருகே பெரிய பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் பரவியது.
இதை கேள்விப்பட்டு அங்கு அப்பகுதி மக்கள் அங்கு குவிந்துவிட்டனர். அதற்குள் அந்த பாம்பு அருகில் இருட்டாக இருந்த ஒரு புதருக்குள் சென்றுவிட்டது.அப்போது கூட்டத்தில் இருந்த குமார் என்பவர் கையில் ஒரு டார்ச் லைட்டுடன் அந்த புதருக்குள் சென்றார். சிறுது நேரம் கழித்து வெளியே வந்த அவர் கையில் சுமார் 8 அடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து கூச்சலிட்டனர்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என பழமொழி உள்ள நிலையில் பாம்பை சர்வசாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த குமாரோ ஏதோ கையில் புடங்காயை பிடித்திருப்பது போல பிடித்திருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியே எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க