April 18, 2018
தண்டோரா குழு
தெலுங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தின் மெகபூப் நகரின் மையப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது.சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள இந்த ஆலமரத்தின் கிளை ஒன்று கடந்த சில காலங்களுக்கு முன்பு பூச்சிகளால் அரிக்கப்பட்டது.இதனை பெரிதாக கண்டுகொள்ளததால் இதன் தாக்கம் ஒட்டு மொத்த மரத்திற்கும் பரவி தற்போது ஆலமரம் பட்டு போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இம்மரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனையடுத்து,பட்டுப்போகும் நிலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் பூச்சிகளை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.