• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 லட்சம் விற்பனையாளர்களின் வளர்ச்சிக்கு உதவ அமேசான்.இன் அறிமுகப்படுத்தும் ‘ஸ்டெப்’ திட்டம்

November 19, 2020 தண்டோரா குழு

விற்பனையாளர்கள் அமேசான்.இனில் தங்கள் விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு உதவிடும் வகையில் செயல்திறன் அடிப்படையிலான நன்மைகள் வழங்கும்‘ஸ்டெப்’ என்னும் திட்டத்தை அமேசான்.இன் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து அமேசான் இந்தியா துணைத் தலைவர் மனிஷ்திவாரி கூறுகையில்,

‘ஸ்டெப்’ திட்டமானது அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.இது விற்பனையாளர்களின் வளர்ச்சி மற்றும்அவர்களின் முக்கிய வாடிக்கையாளர்களின் அனுபவ அளவீடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம், விற்பனையாளர்கள் ‘அடிப்படை’, ‘நிலையான’, ‘மேம்பட்ட’, ‘பிரீமியம்’ மற்றும் இன்னும் பல நிலைகளில் நன்மைகளைத் பெற முடியும்.கட்டண சலுகை, விரைவான வினியோக சுழற்சி முறை, முன்னுரிமை விற்பனையாளர் ஆதரவு மற்றும் உலகத்தரம் வாய்ந்த இலவச கணக்கு மேலாண்மை உள்ளிட்ட சலுகைகளை இந்த திட்டம்கொண்டுள்ளது.

அமேசான்.இன் இந்த திட்டத்தின் மூலம் விற்பனையாளர்களின் செயல்திறன், நன்மைகள் மற்றும் வினியோக முறை ஆகியவற்றை கண்காணித்து அவர்களுக்கான வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆர்டர்கள் ரத்து, ஆர்டர்களை தாமதமாக அனுப்புதல், வருவாய் உள்ளிட்ட விற்பனையாளர்களுக்கான முக்கிய அளவீடுகளை மேம்படுத்த இந்த திட்டம் அவர்களுக்கு உதவுகிறது. மேலும் விற்பனையாளர்கள் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு,ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பயிற்சி, கட்டண தள்ளுபடிகள், விரைவான வினியோக சுழற்சி மற்றும் இலவச கணக்கு மேலாண்மை போன்ற நன்மைகளையும் பெறலாம்.

1 டிசம்பர் 2020ல் துவங்கும் இந்த திட்டத்தில் அமேசான்.இன் அனைத்து விற்பனையாளர்களும் 31 மார்ச், 2021 வரை ‘நிலையான’ நன்மைகளை பெறுவார்கள். இந்தக் காலக்கட்டத்தில்1 ஜனவரி 2021 முதல் 31 மார்ச் 2021 வரை அவர்களின் செயல்பாடுகள் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப 1 ஏப்ரல் 2021 முதல் அவர்கள் ‘அடிப்படை’, ‘மேம்பட்ட’, ‘பிரீமியம்’ நன்மைகளை பெற தகுதிபெறுவார்கள். அனைத்து விற்பனையாளர்களும் ஒவ்வொரு காலாண்டிலும் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் நிலை மற்றும் அதற்கான நன்மைகளை மேம்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.என்று தெரிவித்தார்.ஸ்டெப் திட்ட அறிமுகத்துடன், அமேசான் அதன் திருத்தப்பட்ட கட்டண விகிதத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் வரும் டிசம்பர் 1-ந்தேதி முதல் செயல்பாட்டு வர உள்ளது. இது ஸ்டெப் நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக எடை கையாளுதல் மற்றும் மிக விரைவு ஒப்பந்தக் கட்டண தள்ளுபடி ஆகியவையும் இதில் அடங்கும்.

மேலும் ரூ.250 முதல் ரூ.500 வரையிலான குறைந்த விலை உள்ள தயாரிப்புகளுக்கான இறுதிகட்டணங்கள் மற்றும் அமேசான் சரக்கு இருப்பு மையங்களிலிருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கான வினியோக கட்டணங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க