• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 இருக்கைகள் கொண்ட புதிய கார் ‘கிராவிட்’: இந்தியாவில் நிசான் விரைவில் அறிமுகம்

December 18, 2025 தண்டோரா குழு

இந்திய வாகனச் சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும் வகையில், நிசான் நிறுவனம் தனது புதிய 7-இருக்கைகள் கொண்ட பி-எம்பிவி பிரிவில் ‘கிராவிட்’ என்ற பெயரில் புதிய காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.

இன்றைய கால இந்தியக் குடும்பங்களின் தேவைகளை முழுமையாக ஆய்வு செய்து இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக இடவசதி, மாற்றியமைக்கக்கூடிய இருக்கை வசதிகள் மற்றும் குறைந்த விலை என நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு முழுமையான காராக இது இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2024 ஜூலை மாதமே தனது எதிர்காலத் திட்டங்களை வெளியிட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய மாடல்கள் பின்வருமாறு: 7 இருக்கைகள் கொண்ட கிராவிட் கார் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம்; டெக்டன் அடுத்த ஆண்டின் மத்தியில் அறிமுகம்; 7 இருக்கை கொண்ட சி-எஸ்யூவி 2027-ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் என கூறியிருந்தது. இந்திய வாடிக்கையாளர்களுக்குப் புத்தம் புதிய மற்றும் நவீன ரகக் கார்களைத் தொடர்ந்து வழங்க நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கிராவிட் அறிமுகம், அந்நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

“கிராவிட்” என்ற இந்தப் பெயர் ‘கிராவிட்டி’ என்ற சொல்லில் இருந்து ஈர்க்கப்பட்டது. இது ஒரு வாகனத்தின் சமநிலை, நிலையான தன்மை மற்றும் அனைவரையும் கவரும் ஆற்றலைக் குறிக்கிறது. குடும்பங்களுக்குத் தேவையான வசதி, பன்முகப் பயன்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பத் தொடர்பு ஆகியவற்றை உறுதி செய்யும் நிசானின் உயரிய நோக்கத்தை இந்தப் பெயர் பிரதிபலிக்கிறது.

புதிய கிராவிட் கார், ஒரு குடும்பத்தின் பயண அனுபவத்தையே மாற்றப்போகிறது. இதன் உட்புறம் மிகவும் விசாலமாகவும், பொருட்களை வைப்பதற்கான இடவசதி இதில் மிகச் சிறந்த முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு அம்சமும் மக்களின் தேவைக்கேற்ப மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ‘அல்ட்ரா-மாடுலர்’ இருக்கைகளை, பயணிகளின் எண்ணிக்கை அல்லது லக்கேஜ் அளவிற்கு ஏற்ப மிக எளிதாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதனால் தினசரி அலுவலகப் பயணமாக இருந்தாலும் சரி, குடும்பத்தோடு செல்லும் நீண்ட தூரச் சுற்றுலாவாக இருந்தாலும் சரி, பயணம் மிகவும் இனிமையாக இருக்கும்.அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய கிராவிட் கார், முழுமையாகச் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது.

இது இந்திய வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிசான் நிறுவனத்தின் உறுதியைக் காட்டுகிறது.

நிசான் நிறுவனத்தின் சர்வதேசத் தலைவர் மாசிமிலியானோ மெசினா இது குறித்து கூறுகையில்,

சர்வதேசத் தரத்துடன், அதே சமயம் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து எங்களது அடுத்தடுத்த புதிய கார்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் இந்த புதிய மாடல்கள், இங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது கிராவிட் காரின் அறிமுகம், எங்களது வேகமான வளர்ச்சியைக் காட்டுவதுடன், இந்திய சந்தையின் மீதான எங்களது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க