June 13, 2018
தண்டோரா குழு
7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் “தேசியம் காத்த செம்மல்” என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாடப்புத்தகங்களில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர்.இது குறித்து முதலமைச்சர்,துணை முதலமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.அதன்படி வருகிற கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேசியம் காத்த செம்மல் என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை வரலாறு குறித்து இடம்பெறும் எனக் கூறினார்.
மேலும்,அதில் முத்துராமலிங்கத்தேவர்,நேதாஜியுடன் இணைந்து செயல்பட்டது, இந்திய ராணுவத்திற்கு அவரின் பெரும்பங்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெறும் என செங்கோட்டையன் கூறினார்.