• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்ததற்கான அடையாளம் கண்டெடுப்பு!

January 8, 2018 தண்டோரா குழு

கோவையில் 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்ததற்கான அடையளாம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது.இந்த நாடுகளை காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், முத்தரையர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் ஆவார்கள்.

மறைந்த நகரங்களை மீண்டும் கண்டறிய வேண்டும் எனும் ஆர்வம் அறிவாராய்ச்சியின் விளைவாகும். மலை நாடுகளில் கடல் கொண்ட நாடுகள் பலவற்றை அகழ்வாராய்ச்சி செய்து தேடிடவும் மீண்டும் அவற்றை உருவாக்கிடவும் பெரிதும் முயன்று வருகின்றனர்.இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மரபு சார் ஆர்வலர்கள் கூறுகையில்,

“கோவையின் பல பகுதிகளில் நாயக்கர் மற்றும் பல்வேறு அண்டை தேசத்தினர் வாழந்தும், வணிகம் செய்ததற்கான அடையாளம் தெரிய வருகிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வீர விளையாட்டை நினைவு கூறும் ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் உள்ளது.

பண்டைய காலத்தில் இங்கே ஏறுதழுவல் வீர விளையாட்டும்,போர்கள் நடந்தற்கான அடையளமாக சதிகல் உள்ளது. இவைகள் இப்பகுதின் வரலாற்று பதிவுகளை எடுத்துரைக்கிறது ஆனாலும் மக்கள் இதன் அருமை தெரியாமல் சிலைகளை வழிபாடு செய்யும் வகையில் மாற்றியும் பல இடங்களில் சிலைகள் சிதையுண்டும் காணப்படுகிறது.எனவே,வரும் தலைமுறைக்கு மட்டுமல்ல நம் வரலாற்றை பாதுகாக்க உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்”. என தெரிவித்தனர்.

காளை அடக்கும் வீரன் சதிகல் என தொல்லியல் எச்சங்கள் அதிகளவு உள்ள கோவையில் தொடர் அகழ்வாராய்ச்சி நடத்தினால் பல வரலாற்று பொக்கிஷம் கிடைக்கும் என்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் படிக்க