• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயில் சிலைகள் மீட்பு!

May 30, 2018 தண்டோரா குழு

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன ரூ.150 கோடி மதிப்பிலான ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டது.

தமிழகத்தின் தஞ்சை பெரிய கோவிலில் சோழ மன்னன் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் இருந்தன.கடந்த 60 வருடங்களுக்கு முன்பு இந்த சிலைகள் திருட்டு போயின.இதன் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இதற்கிடையில்,சிலை திருடு பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில்,ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டு உள்ளது. வழக்கு பதியப்பட்ட 90 நாட்களில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கொள்ளையர்கள்,போலி சிலைகளை வைத்துவிட்டு 2 சிலைகளையும் திருடி சென்றுள்ளனர். மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் சிலைகள் ரயில் மூலம் நாளை சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க