• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

580 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாளை வானில் நிகழும் அதிசியம் !

November 18, 2021 தண்டோரா குழு

வானில் ஏற்படும் மாற்றங்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த நிலையில், நாளை சந்திர கிரகணம் வானில் நிகழ உள்ளது. நாளை வானில் தோன்ற உள்ள சந்திர கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். நாளை வானில் தோன்றும் சந்திர கிரகணம் நீண்ட நேரம் வானில் நிகழக்கூடியதாகும். இதற்கு முன்பாக, 15ம் நூற்றாண்டில் தான் இதுபோன்ற சந்திர கிரகணம் தோன்றியது. 1440ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதிதான் கடைசியாக நீண்ட நேரம் நிகழ்ந்த சந்திர கிரகண நிகழ்வு நடைபெற்றது.

இதையடுத்து, 580 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இதுபோன்ற நீண்ட நேரம் நிகழக்கூடிய சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவில் பரவலாக தெரிய உள்ளது. இந்த சந்திர கிரகண நிகழ்வு நாளை மதியம் 12.48 மணி முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது

இந்தியாவில் இந்த கிரகண நிகழ்வு மதியம் 2.34 மணியளவில் தெரிய உள்ளது. 97 சதவீத நிலவு பூமியின் நிழலில் மூடப்பட்டிருக்கும். இந்த அரியவகை நிகழ்வு வடகிழக்கு இந்தியாவான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ள சில பகுதிகளில் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.3 மணி நேரம் 28 நிமிடம் 24 நொடிகள் நிகழ உள்ள இந்த சந்திரகிரகண நிகழ்வு 580 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மிக நீளமான சந்திர கிரகண நிகழ்வாகும்.

சூரியனுக்கும்,நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.இந்த சந்திரகிரகணத்தின்போது சூரியனும், நிலவும் நேர்நேர் எதிர்திசையில் பூமிக்கு இரு புறமும் இருக்கும். அப்போது, நடுவில் உள்ள பூமியின் நிழல் நிலவின் மீது விழும்.

இந்த சந்திர கிரகண நிகழ்வானது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசிய, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதிகளில் தென்படும்.இந்த நிகழ்வின்போது நிலாவானது ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றும். சுமார் 580 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த நிகழ்வானது, அடுத்து 2 ஆயிரத்து 669ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிதான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரியவகை சந்திர கிரகணத்தை காண வானிலை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும் படிக்க