• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

57 மணி நேரத்தில் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

May 19, 2018

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏறப்படுத்தியது. இதுமட்டுமின்றி,எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கபட்டது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில் பாஜக ஆட்சி போட்டியில் இருந்து பின்வாங்கியது.

இன்று மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்னதாக உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்து ஆட்சிப் போருப்பில் இருந்து விலகிக்கொண்டார்.
அவரது இந்த முடிவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி – காங்கிரஸ் கட்சி தலைவர்

“இந்திய மக்களை விட மேலானவர் அல்ல பிரதமர். நாங்கள் கர்நாடக மக்களை காப்பாற்றியுள்ளோம். நாட்டையும் பாஜகவிடமிருந்து காப்போம். நாட்டின் எல்லா நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவது தான் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம். நாட்டில் அதிகாரம் பிரதமராலும் ஆர்.எஸ்.எஸ்ஸாலும் தான் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே கர்நாடகாவின் தற்போதைய ஆளுநர் பதவி விலகினாலும் அடுத்து வருபவரும் இதே வேலையை தான் செய்வார்கள்.

மம்தா பானர்ஜி – மேற்கு வங்க முதல்வர்

ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவிற்கு வாழ்த்துகள். தேவ கவுடா, குமாரசாமி மற்றும் காங்கிரசிற்கு வாழ்த்துகள். இது பிராந்திய முன்னணியின் வெற்றி.

கமலஹாசன் – மக்கள் நீதி மய்யம்

கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு

மாயாவதி – பகுஜன் சமாஜ்வாதி கட்சி

இது பாஜகவுக்கு விழுந்த பெரும் அடி. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர்கள் வகுத்த அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து விட்டன.இனியாவது பாஜகவினர் தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும்.

ப. சிதம்பரம் – முன்னாள் மத்திய அமைச்சர்

“கர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்மலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம்” .

திமுக – செயல் தலைவர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பினாலும் சீரிய நடவடிக்கையாலும் கர்நாடகாவில் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது.

சந்திர பாபு நாயுடு – ஆந்திர முதல்வர்

“ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் இது மகிழ்ச்சியான செய்தி”


வைகோ – மதிமுக பொதுச்செயலாளர்

கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது; தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது .

கனிமொழி எம்.பி – திமுக எம்.பி

எடியூரப்பா ராஜினாமா ஜனநாயகத்துக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றி; உண்மையான முதல்வராகும் மஜதவின் குமாரசாமிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் வாழ்த்து.

திருநாவுக்கரசர் – தமிழக காங்கிரஸ் தலைவர்

கர்நாடகாவில் ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது உச்சநீதிமன்றம் தனது தனித்தன்மை, பெருமையை காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கை பெற்றுள்ளது. மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்களுக்கு கர்நாடக விவகாரம் ஒரு பாடம்

சீமான் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தந்ததால் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டது; ஆனால் நீதிமன்றம் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதால் பாஜகவின் திட்டம் பலிக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவால் விலைக்கு வாங்க முடியவில்லை.

மேலும் படிக்க