• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்தத்தின் முழு தகவலை வெளிப்படை தன்மையாக வெளியிட வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்

July 3, 2018 தண்டோரா குழு

சூயஸ் நிறுவனம் தொடர்பாக தவறான தகவலை அமைச்சரும் தமிழக அரசும் வழங்குவது தவறு எனவும் வெளிப்படைதன்மை இல்லாமல் போடப்படும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“சென்னை மாநகரில் ஊடகவியலாளர் முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,
ஊடகவியலாளர்களின் நலன்களை காக்க உருவாக்கப்பட்டுள்ள அமைப்பிற்கு வரவேற்பும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

மத்திய அரசின் முடிவுகள் சாமானியர்களை பாதிக்கிறது.ஜி.எஸ்.டி வரி திட்டம் அமலான பிறகு சிறு, குறு நிறுவங்கள் மூடப்பட்டுள்ளது, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் எனவும் இது குறித்து பேச பிரதமர் மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

லோக்பால் சட்டத்தை இயற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலத்தில் எந்த திட்டத்தை எதிர்த்தாலும் கைது என்ற நிலை உள்ளதாக கூறியவர் அரசை பற்றி
விமர்சித்தாலே கைது என்பது ஜனநாயக விரோத போக்கு என புகார் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமை ஒப்பந்தம் தொடர்பாக அரசோ மாநகராட்சியோ அறிவிக்காமல் தனியார் நிறுவனம் தான் அறிவித்துள்ளதாகவும்,அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் 5 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்தம் என உள்ளது – தனியார் நிறுவன செய்தி குறிப்பில் 26 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளதாக சுட்டிக் காட்டினார்.

ஒப்பந்தத்தின் முழு தகவலை மாநகராட்சி வெளிப்படை தன்மையாக வெளியிட வேண்டும்,சூயஸ் நிறுவனம் தொடர்பாக தவறான தகவலை அமைச்சரும் அரசும் வழங்குவது தவறு எனவும்,
வெளிப்படைதன்மை இல்லாமல் போடப்படும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

குடிநீர் வழங்குவதற்கு சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்கள் தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறதாகவும்,இதனை ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏற்கனவே 2 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் 3வதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றும்,இதனை எதிர்த்து தொடர்ந்து கட்சி பல போராட்டங்களை கையில் எடுக்க உள்ளதாக கூறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதனை மாநில அரசு உரிய சட்ட நிபுணர்களை கொண்டு மாநில உரிமைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்புமணி ராமதாஸ் பற்றி தமிழிசை தவறாக பேசியது கண்டனத்துக்குரியது”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க