• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

5 ஜி பரிசோதனை ஓட்டத்தின் போது 5 ஜி சேவையின் உச்ச வேகத்தை பதிவு செய்தது வி நிறுவனம் !

September 22, 2021 தண்டோரா குழு

புனே நகரத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் உச்சபட்சமாக 3.7 Gbps க்கும் கூடுதலான வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது .புனே மற்றும் காந்தி நகரில் 5 ஜி பரிசோதனை ஓட்டத்தின் போது 3.5 Ghz band அலைவரிசையில் உச்சபட்சமாக 1.5 Gbps வரை பதிவிறக்க வேகத்தை எட்டியதாக பதிவாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனம் , அதற்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 ஜி அலைவரிசைக்கான பரிசோதனை ஓட்டத்தை அதன் தொழில்நுட்ப வர்த்தகர்களுடன் இணைந்து புனே( மகாராஷ்டிரா)மற்றும் காந்திநகர் (குஜராத்) ஆகிய நகரங்களில் மேற்கொண்டது.புனே நகரத்தில் வி நிறுவனமானது 5 ஜி அலைவரிசையின் பரிசோதனை முறையிலான ஒளிபரப்புக்கான என்ட் டூ என்ட் கிளவுட் கோர் சோதனைக் கூடத்தை நிறுவி, புதிய தலைமுறை டிரான்ஸ்போர்ட் மற்றும் ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் மூலம் இச்சோதனையை மேற்கொண்டது.

இந்த பரிசோதனை ஓட்டத்தில் வி நிறுவனம் உச்சபட்ச வேகமாக 3,7 Gbps க்கும் கூடுதலான வேகத்தை mmWave அலைவரிசையில் தரவை அடிப்படையாக கொண்டு வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் செயல்களுக்கு வெப் அப்ளிகேஷன்கள் மிக மிக குறைவான தாமதத்தில் தகவல் பரிமாற்றத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.5 ஜி அல்லாத நெட்வொர்க் கட்டமைப்பில் என்ஆர் ரேடியோக்கள் வாயிலாக நவீன உபகரணங்களை பயன்படுத்தி இந்த வேகம் எட்டப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு துறையால் வி நிறுவனத்துக்கு உயர் அலைவரிசையான 26 GHz போன்ற mmWave அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது . வழக்கமான 3.5 GHz அலைவரிசையுடன் சேர்ந்து , 5 ஜி நெட்வோர்க் பரிசோதனைக்காக இது ஒதுக்கீடு செய்யப்பட்டது.mmWave மிகவும் பரந்த அலைவரிசையை வெளிப்படுத்துவதுடன் , மிகவும் குறைவான தொலைவுகளுக்கு 5 ஜி , தகவல் பரிமாற்றடத்தை மிக மிக குறைவான தாமதத்துடன்,அதாவது மேற்கொள்ளப்பட்ட செயல்முறைகளுக்கான பதில் நடவடிக்கைகளை சில நொடிகளுக்குள் மிக விரைவாக வழங்குகிறது.

அதே போல 5 ஜி பரிசோதனை நெட்வொர்க்கின் போது, வி நிறுவனம்,புனே மற்றும் காந்திநகரில் அதன் தொழில்நுட்ப அசல் உபகரண உற்பத்தி கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து 3.5 Ghz அலைவரிசையில் உச்சபட்சமாக பதிவிறக்க வேகம் 1.5 Gbps- ஐ எட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த பரிசோதனை ஓட்டம் குறித்து வோடஃபோன் ஐடியா லிட் சிடிஓ ஜக்பீர் சிங் கூறுகையில்,

அரசு ஒதுக்கிய 5 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் , எங்களது தொடக்க நிலை 5 ஜி பரிசோதனை ஓட்டத்தின் போது , குறைவான தாமதத்துடனான தகவல் பரிமாற்றம் மற்றும் சிறந்த வேகத்தை எட்ட முடிந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா முழுவதும் பரந்த அளவில் 4 ஜி நெட்வொர்க் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் வேகமான 4 ஜி சேவையை வழங்க முடிவதுடன் , தயாராக இருக்கும் 5 ஜி நெட்வொர்க் மூலம் தற்போது பரிசோதனை முயற்சியாக அடுத்த தலைமுறை 5 ஜி தொழில் நுட்பத்தை வழங்க முடிவதன் மூலம் நிறுவனங்களுக்கும் , வாடிக்கையாளர்களுக்கும் உண்மையான டிஜிட்டல் அனுபவத்தை எதிர்காலத்தில் தர இயலும் என்றார்.

அதி வேக மற்றும் குறைவான தாமத தகவல் பரிமாற்ற திறன் கொண்ட 5 ஜி நெட்வொர்க் மூலம் மிகவும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெற இயலும். மேலும் AR / VR மூலம் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் வீடியோ கேமிங் அனுபவத்தை பெறலாம்.

மேலும் 5 ஜி ஸ்மார்ட் தொழிற்சாலை பரிணாம வளர்ச்சி பெற இயலும். இண்டஸ்ட்ரீ 4.0 மற்றும் 5 ஜி ஸ்மார்ட் சிட்டி ஆகியன 5 ஜியை நிறுவுவதற்கு உதவியாக இருக்கும். மேலும் நாட்டில் மேம்பட்ட தொழில் நுட்ப முன்னேற்றம் கொண்ட புதிய யுகத்துக்கான ஒரு உத்தரவாதமாகவும் இது அமையும்.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் என்பது ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் வோடஃபோன் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும். இது , இந்தியாவின் முன்னணி தொலைதொடர்புச் சேவை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது .

இந்தியா முழுவதும் 2 ஜி , 3 ஜி , 4 ஜி ஸ்பெக்ட்ரங்களில் குரல் மற்றும் டேட்டா சேவைகளை இந்நிறுவனம் அளிக்கிறது.டேட்டா மற்றும் குரல் தேவை அதிகரிப்புக்கு உதவும் வகையில் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் போர்ட்ஃபோலியோவுடன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவங்களை அளிப்பதில் VIL உறுதியாக உள்ளது.புதிய,சிறப்பான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை வளர்க்கும் இந்நிறுவனம் , எதிர்காலத்துக்குத் தயாராகும் வகையில் பொது மக்களுக்கும்,நிறுவனங்களுக்கும் புதுமையான சேவைகளை அளிக்கிறது.

மேலும் படிக்க