May 1, 2021
தண்டோரா குழு
5 கே கார் கேர் நிறுவனத்திற்கு ஒரே நாளில் 37 புதிய கிளைகள் திறந்தற்காகவும்,ஒரு லட்சம் கார்களுக்கு சானிடைசர் செய்தமைக்காகவும் நோபல் புக் ஆப் ரிக்கார்டு சாதனை விருது வழங்கப்பட்டது.
5கே கார் கேர் நிறுவனத்தின் சாதனை விழா கோவை கொடிசியா அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.இதில் 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கார்த்திக்குமார் சின்னராஜ் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் 5 கே கார் கேர் நிறுவனம் ஒரே நாளில் 37 புதிய கிளைகள் திறந்தற்காகவும்,ஒரு லட்சம் கார்களுக்கு சானிடைசர் செய்தமைக்காகவும் நோபல் புக் ஆப் ரிக்கார்டு சாதனை விருது வழங்கப்பட்டது. இதனை நோபல் புக் ஆப் ரிக்கார்டை பதிப்பாளர் தியாகு, 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் குமார் சின்னராஜீக்கு வழங்கினார்.
இதுகுறித்து கார்த்திக் குமார் சின்னராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
5 கே கார் கேர் 2012 முதல் 100 கிளைகள் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.ஒரே நாளில் 37 புதிய கிளைகள் திறந்தகாகவும், ஒரு லட்சம் கார்களுக்கு சானிடைசர் செய்ததற்காகவும் நோபல் புக் ஆப் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவிட்டில் இருந்து பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளோம். கார்களை புதிதாக பாதுகாக்கும் வகையில் ஐந்து புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஓராண்டில் சாதனை புரிந்த சாதனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.புதிதாக 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளோம் என்றார்.