• Download mobile app
02 Oct 2023, MondayEdition - 2791
FLASH NEWS
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது – ப.சிதம்பரம்
  • முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை – கே.பி.முனுசாமி

5 குட்டிகளுடன் வந்த 12 யானைகள் : ஆழ்துளை கிணறு, விவசாய நிலங்களை சேதப்படுத்தியது

January 21, 2023 தண்டோரா குழு

கோவை பேரூர் அருகே 5 குட்டிகளுடன் வந்த 12 யானைகள்,ஆழ்துளை கிணறு, விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.

கோவை பேரூர் அருகே தீத்திபாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் தனி நபருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.இன்று அதிகாலை 4 மணி அளவில் 5 குட்டிகள் உட்பட 12 யானைகள் அங்கு வந்தன.அப்பகுதியில் ஏக்கர் கணக்கில் தீவனப் பிள்ளை மேய்ந்து விட்டு அதன் பின்பு அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து இரண்டு ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தி விட்டது.

மேலும் அத்தோட்டத்தில் தக்காளி செடிக்கு செல்வதற்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தி விட்டது. பின்னர் வனப்பகுதிக்கு யானை கூட்டம் சென்றுவிட்டது.யானைகளால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க