• Download mobile app
02 Oct 2023, MondayEdition - 2791
FLASH NEWS
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது – ப.சிதம்பரம்
  • முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை – கே.பி.முனுசாமி

5 கிலோ கஞ்சா பறிமுதல் : ஒடிசா இளைஞர் கைது

June 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே செட்டிபாளையம் சாலை மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்கா(29) என்பவர் தப்பித்து ஓட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க