June 14, 2018
தண்டோரா குழு
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை.முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு வழங்கிய டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 பேரையும் சபாநாயகா் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 சட்டமன்ற உறுப்பினா்கள் சார்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில்,18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.அதே போல் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தெரிவித்துள்ளார்.இதனையடுத்து நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும்,புதிய அமர்வு தகுதி நீக்க வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.