June 4, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்ட பேரவையில் பேசிய தமிழக முதல்வர்,
ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது.ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை.போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் கைது செய்கிறார்களே தவிர பொதுமக்கள் அல்ல என்று கூறினார்.