November 26, 2021
தண்டோரா குழு
கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (75). இவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது,:-
எனது பக்கத்து வீட்டில் விருதுநகரை சேர்ந்த செந்தில்குமாரி என்பவர் வசித்து வந்தார். ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செய்து வந்தார். இந்த நிலையில் தொழில் தேவைக்காக என்னிடம் இருந்து ரூ 17 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இதுவரை திருப்பித் தரவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த செந்தில்குமாரி வீட்டிலிருந்த 48 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டார். எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மீட்டு ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் அவரை ஏமாற்றி பணம் பெற்று 48 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகிறார்கள்.