May 15, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் பெண்ணை சிறுத்தை தாக்கியது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சத்துணவு மையத்தில் வேலை செய்து வருபவர் மகாலட்சுமி(36).இவர் இன்று காலை சுமார் 7.45 மணியளவில் அவரது வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டு இருந்து உள்ளார்.அப்போது,தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அந்த பெண்ணை தாக்கியது.
இதனையடுத்து வீட்டின் அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதில் சிறுத்தை மகாலட்சுமியை விட்டு ஓடியது.படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் இருந்த மகாலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு கை கால் தொடையில் பலத்த காயங்கள் இருந்தன.இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.