July 6, 2021
தண்டோரா குழு
மிகக்குறைந்த கால அவகாசத்தில் ப்ரீகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பத்தில் இரண்டு அடுக்குமாடி மருத்துவமனை கட்டிடத்தை கட்டி டீமேஜ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
டீமேஜ் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமாக உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 14 ஆண்டுகளில் உலக தரம் வாய்ந்த பல்வேறு கட்டுமானப் பணிகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் இரண்டு அடுக்குமாடி மருத்துவமனை கட்டித்தை 45 நாட்களில் கட்டி முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கான உலக சாதனை சான்றளிப்பு விழா இன்று அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மருத்துவ சேவைக்காக தமிழக அரசிற்கு மருத்துவமனை கட்டிடத்தை நன்கொடையாக கட்டித்தர ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் முடிவு செய்த நிலையில், கட்டிட பணிகளை டீமேஜ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டீமேஜ் நிறுவனம் 45 நாட்களில் 401 படுக்கையறை வசதிகள் கொண்டு இரண்டு அடுக்குமாடி மருத்துவமனை கட்டிடத்தை (PRECAST) பிரீகாஸ்ட் காங்கிரீட் தொழில் நுட்பத்தில் கடந்த மே 18ம் தேதி துவங்கி ஜூலை 1ம் தேதி நிறைவு செய்து கொடுத்துள்ளது.
இதுவே, மிகக்குறைந்த கால அவகாசத்தில் ப்ரீகாஸ்ட் கான்கீரிட் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய மருத்துவமனை என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இதனை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளன.
இந்நிலையில், இதற்கான உலக சாதனை சான்றளிப்பினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் Dr. ஜவகர் கார்த்திகேயன், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் Dr. AK.செந்தில் குமார், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் மற்றும் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் P. ஜெகநாதன்,தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் கவிஞர் L. ராஜ் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு டீமேஜ் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் NK. நந்தகோபாலிடம் உலக சாதனை சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள்.
உடன் உலக சாதனை நிகழ்வின் திட்ட இயக்குநர் A. பிரனேஷ் பாபு இணைந்து பெற்று பெற்றுக்கொண்டனர்.மேலும்,இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி Dr.மயில்சாமி அண்ணாதுரை கலந்த கொண்டு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை தமிழக அரசிடம் ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.