March 16, 2018
தண்டோரா குழு
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான கேசி. பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிசாமியை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நீக்கியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி உறுப்பினர்கள் யாரும் கே.சி.பழனிசாமியுடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
அதிமுகவில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.